உங்க மனைவி பிடிவாத குணம் மிக்கவரா? அப்ப நீங்க தான் ரொம் அதிஷ்டசாலியாம்!!!

பெண்களிடம் உள்ள குணங்களில் சில சமயம் ரசிக்கவும் பெரும்பாலான சமயங்களில் எரிச்சலடைய வைக்கும் குணம் இந்த பிடிவாத குணம் தான். பிடிவாத குணமுடைய மனைவி அமைந்தால் தங்களுடைய வாழ்க்கை போராட்டமாகி, பாழாய்ப் போகும் என்றுதான் பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?…
பிடிவாத குணமுடைய பெண்களிடம் நிறைய சிறந்த குணங்களும் இருக்கும் என்பதை ஆண்கள் மறந்துவிடுகிறார்கள்.
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதைப்போல் பிடிவாத குணமுடையவர்கள் தான் சிறந்த மனைவியாகத் திகழ்வார்கள்.

பிடிவாத குணமுடைய பெண்கள் பொருள்களை வாங்கி சேர்ப்பதில் மட்டும் பிடிவாதமாக இருப்பதில்லை. அவர்களுடைய முழு எண்ணமும் வாழ்க்கையில் எப்படியெல்லாம் முன்னேற வேண்டும் என்பதைப் பற்றித்தான் இருக்கும்.

இல்லற வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து குணங்களும் பிடிவாத குணமுடைய பெண்களிடம்தான் இருக்கும். இவர்கள் தான் நினைத்ததை அடையாமல் விடமாட்டார்கள். அதேபோல் தனக்கு வேண்டாத பொருள்மீது ஒருபோதும் ஆசைப்பட மாட்டார்கள்.

மற்றவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் காதல் உண்மையானதாகவும் அழகானதாகவும் இருக்கும். அவர்கள் கோபம், அன்பு, பிடிவாதம், அரவணைப்பு என எதுவானாலும் அதை முழு மனதுடன் வெளிப்படுத்துவார்கள்.
தங்களுக்குப் பிடித்த யாரேனும் ஒரு செயலில் பாதியில் என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றால் பிடிவாத குணமுடைய பெண்கள் அவர்கள வழிநடத்தி வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுப்பார்கள்.

சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்பவர்கள்.
அதனால் பிடிவாத குணமுடைய பெண்கள் மனைவியாக அமைந்தால் நீங்கள் பயமோ வருத்தமோ படத் தேவையில்லை.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.