உங்க ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று சொல்கிறார்கள். ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழுந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை.

தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகும். இந்த நேரத்தில் நல்ல காரியங்களை மக்கள் செய்வது இல்லை. பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ராகுவின் வரலாறும் கேதுவின் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே வித தன்மையை உடையன. ஸ்ரீராகு ஸம்ஹதா தேவியின் மகனாவார். தேவரும், அசுரரும் பார்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கிக் கடைந்தனர்.

பார் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. கடைசியாகத் தன்வந்திரி பாற்கடலில் இருந்து எழுந்தார். அவரது கரங்களில் அமிர்த கலசம் இருந்தது.

அதை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் வந்தார்.

அவரைக் கண்ட அசுரர்கள் மயங்கி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருமாறு வேண்டினர். மோகினி தேவர்களுக்கு அமிர்ததத்தைப் பங்கிட்டுக் கொடுத்து கொண்டு வந்தாள். அப்போது ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் தேவர்களின் உருவம் கொண்டு அமர்ந்து அமிர்தத்தை உண்ண ஆரம்பித்தனர்.

அவர்கள் சாப்பிட்ட விதத்தைப் பார்த்த சூரியன், சந்திரன் ஆகியோர் அவர்கள் அசுரர்கள் என்பதை உணர்ந்தனர். இதையடுத்து மோகினி கரண்டியினால் ராகுவின் தலையை வெட்டினாள். உடனே ராகுவின் தலை ஆகாயம் சென்றது. தலையற்ற முண்டம் தரையில் வீழ்ந்தது. இதனால் அசுரர்கள் கொதித்தெழுந்தனர். தேவர்- அசுரர் போராட்டம் மிகவும் பயங்கரமாக எழுந்தது.

அதில் ராகுவின் தலை சிவசிரஸில் இருக்கும் சந்திரனைக் கவ்வியது. அப்போது சந்திரனின் தலையில் உள்ள அமிர்தத்தை ராகுவின் தலை பருகியதால் ராகுவிற்குப் பல தலைகள் உண்டாயிற்று. ராகுவின் பல தலைகளைக் கண்டு தேவர்கள் பயந்தனர். சிவபெருமான் ராகுவின் தலைகளை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார்.

ராகுவின் தலைகள் அமைதி அடைந்தன. தேவர்களின் பயம் நீங்கியது.

ஈசனருளால் ராகு கிரகமாய் இருக்கும் தன்மையைப் பெற்றான். ராகுவை உபாசிக்க ராகுவினால் உண்டாகும் பீடைகள் போகும். ராகுவைப்போலவே கேதுவும் அமிர்தம் பட்ட காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்றான். சிவனது அருளால் கிரகமாகும் பேற்றைப் பெற்றான்.

கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும். இவர் உதித்தது, ஆடி மாதம் சுக்கில பட்சம் ஆகும். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் இவரை வழிபடுவது சிறப்புடையதாகும்.

வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்று அழைப்பார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழுந்தை பாக்கியம் கிடைக்காது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.