வாரத்தில் ஒரு நாள் சிறுநீரகக் கற்களை கரைக்க உண்ண வேண்டிய உணவுகள்!!

இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும்.

அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம்.


இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும்.

அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம்.


தண்ணீர்
அனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும்.

ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிககிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.


வெந்தய தண்ணீர்
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.


டால் மிஸ்ரி
இது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான்.

ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது. இது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.


வாழைத்தண்டு
சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும்.

அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.

கொத்தமல்லி இலைகள்
கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.