Latest Post

உங்கள் வாழ்க்கை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்

1)Facebook ல் photo அதிகமாக பகிர வேண்டாம்

2)Facebook ,what’s appHack பண்ணுவது மிகமிக எளிது எனக்கு தெரிந்த வரையில் 5 நிமிடம் போதும்உங்க mobile நீங்க lock பண்ணிருந்தாலும்hack பண்ணலாம்

3)uc browser, opera browser போன்றவற்றில் தவிர்க்கவும்#facebooklite ( hack பண்ணுவது மிக கடினம்)

4)free recharge னு#லிங்வந்தால் அதுல போகதீங்க ஈசியா உங்க all photos dataஅவங்களுக்கு போயிடும்

5)உங்க mobile memory space இருந்தும் நீங்க 3g network .இருந்தும் உங்க மொபைல் டக்குனு சூடு ஆனாளோ,ஹாங் ஆனாலோ உங்க தரவுகளை யாரோ திருடுறாங்கனு அர்த்தம்உடனே mobile data off பண்ணிட்டு சிம் கார்டை கழட்டிருங்க

6) யாரும் உங்களை மிரட்டினால் உங்கள் வீட்டுல சொல்லிடுங்க(அதே
போல் அப்பா அம்மா நம்புங்க அந்த பெண் சொல்வதை)

7)what’s app LA privacy LAPhoto only my contact னு வைங்கசில மாசத்துக்கு முன்னாடி எனக்கு#அணுராதாஎன்ற பெயர் என்னோட எல்லா status ku#likeபோட்டாங்க ஒரு நாள் frnd request vanthuchu நானும் accept பண்ணேன் அந்த ஐடி பார்த்த வுடனே அது#ஆண்என்று கண்டு பிடிச்சேன்Mutual frnd என் தோழி ஒரு பெண்ணை காட்டுச்சுசில நாள் கழித்து அந்த ஐடி நேம்#தஞ்சை_தர்ம
ேந்திரன்என்று மாற்றபட்டு இருந்தது அத பத்தி அந்த ஐடிக்கு செய்தி அனுப்பிய பொழுது#blockபண்ணிடான் என் தோழியிடம் இத சொன்னேன்

அந்த பெண் cool ah எனக்கு தெரியும் அந்த அண்ணனே சொல்லிடாங்க நல்ல அண்ணன் னு சொல்லுது ( இது கவிழ்கும் திட்டம் என்று அப்பெண்ணுக்கு புரியவில்லை)

8) உங்க போன்#ரிப்பேர்என்றால் அந்தரங்க போட்டோ இருந்தால்,இதற்கு முன் எடுத்து அழித்திருந்தாலும் தயவு செய்து ரிப்பேர்க்கு கொடுக்க வேண்டாம் போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .அழித்த தகவல்களை திரும்ப பெறலாம்.

சகோதரிகளுக்கு முதலில் ஒரு அன்பு வேண்டுகோள்…

தயவுசெய்து தற்கொலை என்ற கோழைதனமான முடிவை இனி யாரும் எடுக்காதீர்கள்.

தவறு செய்தவனே இந்த உலகத்தை கண்டு பயப்படாதபோது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்து சம்பந்தப்பட்டவனை சந்திசிரிக்க செய்திருந்தால் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும்.

உங்களை போன்ற பெண்களிடம் தற்கொலை அவர்களின் ஈன செயலை இன்னும் ஊக்கப்படுத்தும்.

உங்களால் முடிந்தால் முகநூல் மூலம் இச் செய்தியைப் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துஙகள்.

கழுத்து, அக்குள், தொடையின் உள் பகுதி போன்ற இடங்களில் கருமையான படலம் ஏற்படுவதற்கு காரணம் அதிகமாக வியர்வை வெளியேறுவது, வாக்சிங் அல்லது ஷேவிங் செய்வது, டியோடரண்ட் பயன்படுத்துவது மற்றும் சூரியக்கதிர்கள் அவ்விடத்தில் அதிகமாக படுவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சில சமயங்களில் உடல் பருமன், சர்க்கரை நோய், இரையக குடலிய அல்லது சிறுநீர்பிறப்புறுப்பு புற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் அவ்விடங்கள் கருமையாக இருக்கும்.
இக்காலத்தில் மக்கள் அழகை, நிறத்தை மேம்படுத்த பல சரும நிபுணர்களை சந்தித்து, தங்களது அழகை மேம்படுத்தி வருகிறார்கள். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க, சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்க பணத்தை கண்டபடி செலவு செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளைப் பின்பற்றி வாருங்கள்.
வழி #1 
தேவையான பொருட்கள்: கல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை:
ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் கருமையாக உள்ள அக்குள், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வழி #2 
தேவையான பொருட்கள்: வெள்ளை நிற க்ளே பவுடர்- 1 டேபிள் ஸ்பூன் பால் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை:
ஒரு பௌலில் வெள்ளை நிற க்ளே பவுடரை போட்டு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

பரிந்துரை #1 
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஒன்றை வாரத்திற்கு 3 முறை பின்பற்றி வந்தால், கருமை படலம் நீங்குவதை நன்கு காணலாம்.
பரிந்துரை #2 
இந்த வழிகளை பின்பற்றும் போது சூரியக்கதிர்கள் அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் வெளியே செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவுங்கள்.
பரிந்துரை #3 
தண்ணீர் அதிகம் பருக வேண்டும் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளான பாதாம், பப்பாளி, அவகேடோ, ப்ராக்கோலி, முட்டை, குடைமிளகாய், பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
பரிந்துரை #4 
வேண்டுமானால், இந்த பேக்களுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆணுக்கும் தான் அழகாக திகழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். மேலும் தன் அழகால் பல பெண்களை கவர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வுலகில் அகத்தோற்றத்தை விட, வெளித்தோற்றத்தைக் கொண்டு தான் ஒருவரை பற்றி பேசுகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது.

எனவே ஆண்களும் தற்போது தங்களின் அழகின் மேல் அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதற்காக பல செயல்களை பின்பற்றுகின்றனர். மேலும் நல்ல தோற்றமானது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

ஆகவே ஆண்களே உங்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரிக்க சில டிப்ஸ்களை தமிழ் போல்ட்ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, அழகை மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

நரை முடி
தற்போது பலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. உங்களுக்கு நரை முடி அதிகம் இருந்தால், அதனைக் கொண்டே அற்புதமான தோற்றத்தில் ஜொலிக்க முடியும். ஆனால் அதற்கு அவ்வப்போது ட்ரிம் செய்வதோடு, கண்டிஷனர் போட்டு முடியை அலச வேண்டும். இதனால் முடி மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருக்கும்.

பெர்ஃப்யூம்
வியர்வை நாற்றம் அடிக்கக்கூடாதென்றும், நம் உடல் நல்ல நறுமணத்துடனும் இருக்க, பெர்ஃப்யூம்களை அடிக்க வேண்டியது தான். ஆனால் பெர்ஃப்யூம் பாட்டில் போல் மணம் வீசாமல், அளவாக அடித்து அளவான நறுமணத்துடன் இருங்கள்.

தாடி
தற்போது தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகிவிட்டது. மேலும் தாடி வைத்துள்ள ஆண்களே பெண்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றனர். எனவே தேவதாஸ் போல் நீளமாக தாடி வைக்காமல், ஸ்டைலாக தாடி வைத்துக் கொள்ளுங்கள்.

வழுக்கை
முடி அதிகம் உதிர்ந்து, வழுக்கைத் தலை வந்துவிட்டதா? அப்படியெனில் கவலைப்படாதீர்கள். வழுக்கை இருந்தால், அதற்கு ஏற்ற ஸ்டைலை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக, வழுக்கை இருக்கும் பெரும்பாலான ஆண்கள் அதை மறைப்பதற்கு மொட்டை அடித்து, அதற்கேற்ப ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர். வேண்டுமெனில் இதில் நீங்கள் பின்பற்றலாம்.

கட்டுக்கோப்பான உடல்
பெரும்பாலும் பெண்களுக்கு உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ளும் ஆண்களைப் பிடிக்கும். எனவே ஜிம் சென்று உடலை கட்டுக்கோப்புடன் பராமரித்து வாருங்கள்.

ஃபேஸ் பேக் அல்லது ஃபேஷியல்
முகத்தில் உள்ள அதிகப்படியான அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற, வாரம் ஒருமுறை ஃபேஷியல் அல்லது ஃபேஸ் பேக்கை போடுகள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, முகம் பளிச்சென்று பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மஞ்சள் பற்களுக்கு ‘பை’ சொல்லுங்கள்
நீங்கள் புகைப்பிடிப்பவரா? அப்படியெனில் உடனே அந்த பழக்கத்தை கைவிடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் உடல் பாதிப்பதோடு, பற்களின் ஆரோக்கியமும் அழகும் பாதிக்கப்படும். மேலும் தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் உப்பு சேர்த்து துலக்குங்கள். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகலும்.

ஈர்க்கும் கண்கள்
இரவு நேர பார்ட்டிகள் மற்றும் நீண்ட நேரம் டிவி பார்ப்பது போன்றவற்றினால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் கண்கள் பொலிவிழந்து, கண்களைச் சுற்றி கருவளையங்கள், சிவப்பான கண்கள், கண்களைச் சுற்றி சுருக்கங்கள் போன்றவை ஏற்பட்டு, கண்களின் அழகே போய்விடும். எனவே அழகான கண்களைப் பெற இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

விரல் நகங்கள்
உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள விரல்களில் நகங்கள் பெரியதாக வளர்ந்திருந்தால், அவற்றை வெட்டி விடுங்கள். குறிப்பாக வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, கை விரல்களை அழகாக வெளிக்காட்டும்.

பொருத்தமான உடைகள்
முக்கியமாக வெளியே செல்லும் போது, இடங்களுக்கு தகுந்தவாறான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து செல்லுங்கள். இது தான் உங்களின் தோற்றத்தையே சிறப்பாக வெளிக்காட்டும்.

சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர்.
இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம். திருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள்.
இது சந்தேகங்கள் என்று கூற முடியாது, பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த தெரியாத தகல்வல்கள்…
நறுமணம்
மொநெல் இரசாயனத் சென்சஸ் மையம் நடத்திய ஓர் ஆய்வில், தங்கள் எதிர் பாலினத்தை எளிதாக ஈர்க்க நீங்கள் நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டது.
இஞ்சி
பாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது. ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது
வயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டி-ஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறதாம்.
உணவு
உணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
ஆணுறை
பொதுவாக ஆணுறைகள் இரண்டு ஆண்டுகளுக்கு பழமையானவை பயனளிக்காது. எனவே, ஆணுறை வாங்கும் போது அதன் உற்பத்தி தேதியை பார்க்க வேண்டியது அவசியம்.
விந்து வெளிப்படுதல்
அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாம். JAMA எனும் அமைப்பினர் நடத்திய ஆய்வில், அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டது.
வலி நிவாரணி
உடலுறவில் உச்சம் காணும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது. இது எண்டோர்பின் வெளிப்பட காரணமாக இருக்கிறது. எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-ஸ்பாட்
பொதுவாக ஜி-ஸ்போட் என்று குறிப்பிடப்பட்டு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதை கண்டறிந்த மருத்துவர் எர்ன்ஸ்ட் கிராஃபென்பெர்க் என்பவர் இந்த பெயரை வைத்தார். இதுக் குறித்து இவர் இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதைகள்
ஆண்களுக்கு இரண்டு விதைகள் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இரண்டும் ஒரே அளவில் இருக்காது என்பது பலரும் அறியாத தகவல். இடது விதை, வலது விதையை விட 10% சிறியதாக தான் இருக்கும்.
சுருங்குதல்
பதின் வயதினை கடக்கும் போது ஆண்கள் முதன் முறையாக இதை சந்தித்து இருப்பார்கள். அதுவரை ஆணுறுப்பு சுருங்கி, விரியும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது. இது இயற்கையானது, இதை என்ன செய்தாலும் மாற்ற முடியாது என பல ஆய்வுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

பெண்களை இம்ப்ரஸ் செய்வது என்பது அவ்வளவு கஷ்டமா…? என்றால் ஆம், என்றும் கூறலாம், இல்லை என்றும் கூறலாம். இன்ஜினியரிங் படித்த மாணவன் ஒருவனை அழைத்து ப்ராஜெக்ட் செய்வது அவ்வளவு கடினமா என்று கேட்டால் என்ன பதில் கூறுவான். அது ப்ராஜெக்ட்டை பொருத்தது என்பான்.

அப்படி தான் காதலும், பெண்களும். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி. அந்த ஃபீலிங்கை புரிந்து கொண்டு அவர்களை அணுக வேண்டும். “ரோமனில் இருந்தால் ரோமனாய் இரு” என்ற பழமொழி இருக்கிறது அல்லவா. அப்படி தான், பாகிஸ்தானில் நின்றுக் கொண்டு பாரிஸ் கார்னரில் செய்வதை எல்லாம் செய்ய முடியாது.

எனவே, அடிப்படையாக நீங்கள் காதலிக்கும் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கும் போது சில தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்….

பல்லை காட்டுவது
காணாததை கண்டது போல, அந்த பெண்ணை கண்டவுடன் 32 பல்லையும் காட்ட வேண்டாம். உங்கள் வாய் ஒன்றும் அழகு பொருள் அலமாரி அல்ல. இதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இது, “அவன் வழியிராண்டி..” என அவர்கள் எண்ண வைத்துவிடும்.

வீராப்பு
ஆண்களின் வீராப்பு தான் கெத்து என பெண்களே கூறும்போது. அதை லூசில் விட்டுவிட கூடாது. அதற்கென, அர்னால்டுக்கு பக்கத்து வீட்டுக்காரன் போல முகத்தை வைத்துக் கொள்ளவும் கூடாது. உணவில் உப்பு போல, அளவாக இருக்க வேண்டும்.

சிரிப்பு
பெண்கள் என்றால் சினேகா போல வாய் நிறைய சிரிக்க வேண்டும். ஆண்கள் என்றால் “வாரணம் ஆயிரம்” சூர்யா போல செம்ம ஜோக் சொன்னாலும் லைட்டாக சிரிக்க வேண்டும்.

வழிந்துகொண்டே பேச வேண்டாம்
பேச தொடங்கியதும் வழிந்துகொண்டே பேச ஆரம்பிக்க வேண்டாம். சற்று நிதானமாக செயல்படுங்கள். மெல்ல, மெல்ல பேச்சை அதிகரிக்க தொடங்குங்கள்.

பரிசுகள்
குறைந்தபட்சம் அவர்களை பார்க்கும் போது பத்து ரூபாய் டைரி மில்க்காவது வாங்கி செல்லுங்கள். பரிசுகள் தான் பெண்களை இம்ப்ரஸ் செய்வதற்கான சிறந்த வழி.

உண்மை, நேர்மை
இன்றெல்லாம் காதலே உண்மை, பொய் என இரண்டு வகை பிரித்துவிட்டனர். எனவே, நேர்மையாக இருங்கள். மொபைலில் பேசிக் கொண்டே வாட்ஸ்அப்பில் வேறு நபருடன் கடலை வறுப்பது எல்லாம் வேண்டாம்.

சிரிக்க வைக்க வேண்டும்
நீங்கள் சிரித்தால் மட்டும் போதாது, உங்களிடம் பேசும் போது அவர்களும் சிரிக்க வேண்டும். மொக்கை ஜோக் சொன்னால் கூட சிரிப்பார்கள் என நினைக்க வேண்டாம். பிறகு தோழிகளுடன் கூட்டு சேர்ந்து சிரிக்க நீங்கள் கருவியாகி விடுவீர்கள்.

எத சொன்னலும் நம்பனும்
அட, நம்ம ரஜினிதான் அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னலும் நம்பனும். இல்லா, நான் அறிவுல ரொம்ப ஸ்ட்ராங் என்றால், சண்டையும் ஸ்ட்ராங்காக வரும் பரவாயில்லையா???

நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஒவ்வொரு, பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி… அதனால, நாங்கள் என்ன சொல்ல வரோம்-னா ஏதாவது அருவா வெட்டு, செருப்பு பிஞ்சு போறது போன்ற சம்பவங்கள் நேரிடும் பட்சத்தில் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

பொய் இல்லாத உறவுகள் இல்லவே இல்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, திட்டு வாங்காமல் இருக்க, தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள, உறவில் பிரிவு ஏற்படாமல் இருக்க என பல இடங்களில் நாம் பொய்கள் கூறி வருகிறோம். இவை எல்லாம் தவிர்க்க முடியாதவை.
ஆனால், சில பொய்களை உங்கள் வாழ்க்கையில் உங்கள் துணையிடம் இருந்து தினம், தினம் உண்மை என எண்ணி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு தெரியுமா? ஆம், தாம்பத்தியத்தில் துவங்கி, அன்றாடம் கூறும் ஐ லவ் யூ வரை இது நீள்கிறது.
பொய் # 1 
அந்தரங்க வாழ்க்கை! நான் நமது அந்தரங்க வாழ்க்கையை பற்றி யாரிடமும் கூறியதில்லை, கூறவும் மாட்டேன் என உங்கள் துணை கூறலாம். ஆனால், பெண்கள் மத்தியில் தோழிகளுடன் அவரவர் அந்தரங்க வாழ்கையை பற்றி பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
பொய் # 2 
எந்த பிரச்னையும் இல்லை! உங்கள் துணை எப்போதாவது உங்களிடம் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நல்லதா இருக்கேன் என்று கூறினால். அவர் சமீப காலமாக ஏதோ பிரச்சனை அல்லது, நீங்கள் செய்யும் செயல் ஏதோ அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
பொய் # 3 
உங்களது தோற்றம்! உங்கள் தோற்றத்தை பற்றி எந்த கவலையும் இல்லை, என உங்கள் துணை கூறிகிறார் எனில், நீங்கள் கன்றாவியாய் உடை உடுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
பொய் # 4 
உங்கள் நண்பர்கள்! நீங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது, அவர்களுடன் அதிகமாக பழகுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை, என அவர்கள் கூறும் தொணியிலேயே அவர்கள் பொய் தான் கூறிகிறார் என நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
பொய் # 5 
பணம்! பணம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. உண்மை தான் அவரது தோழி / உறவுக்கார பெண்ணின் கணவரை விட நீங்கள் அதிகமாக சம்பாதிக்கும் வரை. இல்லையென்றால் ஊதிய உயர்வை பற்றி அடிக்கடி பேச்சுக்கள் அடிப்படும்.
பொய் # 6 
காலிங்! நீங்கள், “முக்கியமான மீட்டிங் அல்லது அவசர வேலை, இன்னிக்கி கால் செய்யாதே” எனும் போது, “நான் எதுக்கு உங்களுக்கு கால் செய்ய போறேன், பண்ண மாட்டேன் போங்க!” என்று கூறுவார்கள். ஆனால், அன்று தான் எக்கச்சக்கமான கால்கள் வரும்.
பொய் # 7 
கம்பேரிஷன்! ஒப்பிட்டு பேசாமல் பெண்களால் இருக்க முடியாது. குறைந்தபட்சம், ஒப்பிட்டு பார்த்துக் கொண்டாவது இருப்பார்கள். இது, ஊதியம், உறவும், சந்தோஷம் என அனைத்திலும் அடங்கும்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.