பெண்களை இம்ப்ரஸ் செய்வது என்பது அவ்வளவு கஷ்டமா…? என்றால் ஆம், என்றும் கூறலாம், இல்லை என்றும் கூறலாம். இன்ஜினியரிங் படித்த மாணவன் ஒருவனை அழைத்து ப்ராஜெக்ட் செய்வது அவ்வளவு கடினமா என்று கேட்டால் என்ன பதில் கூறுவான். அது ப்ராஜெக்ட்டை பொருத்தது என்பான்.
அப்படி தான் காதலும், பெண்களும். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி. அந்த ஃபீலிங்கை புரிந்து கொண்டு அவர்களை அணுக வேண்டும். “ரோமனில் இருந்தால் ரோமனாய் இரு” என்ற பழமொழி இருக்கிறது அல்லவா. அப்படி தான், பாகிஸ்தானில் நின்றுக் கொண்டு பாரிஸ் கார்னரில் செய்வதை எல்லாம் செய்ய முடியாது.
எனவே, அடிப்படையாக நீங்கள் காதலிக்கும் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கும் போது சில தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்….
பல்லை காட்டுவது
காணாததை கண்டது போல, அந்த பெண்ணை கண்டவுடன் 32 பல்லையும் காட்ட வேண்டாம். உங்கள் வாய் ஒன்றும் அழகு பொருள் அலமாரி அல்ல. இதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இது, “அவன் வழியிராண்டி..” என அவர்கள் எண்ண வைத்துவிடும்.
வீராப்பு
ஆண்களின் வீராப்பு தான் கெத்து என பெண்களே கூறும்போது. அதை லூசில் விட்டுவிட கூடாது. அதற்கென, அர்னால்டுக்கு பக்கத்து வீட்டுக்காரன் போல முகத்தை வைத்துக் கொள்ளவும் கூடாது. உணவில் உப்பு போல, அளவாக இருக்க வேண்டும்.
சிரிப்பு
பெண்கள் என்றால் சினேகா போல வாய் நிறைய சிரிக்க வேண்டும். ஆண்கள் என்றால் “வாரணம் ஆயிரம்” சூர்யா போல செம்ம ஜோக் சொன்னாலும் லைட்டாக சிரிக்க வேண்டும்.
வழிந்துகொண்டே பேச வேண்டாம்
பேச தொடங்கியதும் வழிந்துகொண்டே பேச ஆரம்பிக்க வேண்டாம். சற்று நிதானமாக செயல்படுங்கள். மெல்ல, மெல்ல பேச்சை அதிகரிக்க தொடங்குங்கள்.
பரிசுகள்
குறைந்தபட்சம் அவர்களை பார்க்கும் போது பத்து ரூபாய் டைரி மில்க்காவது வாங்கி செல்லுங்கள். பரிசுகள் தான் பெண்களை இம்ப்ரஸ் செய்வதற்கான சிறந்த வழி.
உண்மை, நேர்மை
இன்றெல்லாம் காதலே உண்மை, பொய் என இரண்டு வகை பிரித்துவிட்டனர். எனவே, நேர்மையாக இருங்கள். மொபைலில் பேசிக் கொண்டே வாட்ஸ்அப்பில் வேறு நபருடன் கடலை வறுப்பது எல்லாம் வேண்டாம்.
சிரிக்க வைக்க வேண்டும்
நீங்கள் சிரித்தால் மட்டும் போதாது, உங்களிடம் பேசும் போது அவர்களும் சிரிக்க வேண்டும். மொக்கை ஜோக் சொன்னால் கூட சிரிப்பார்கள் என நினைக்க வேண்டாம். பிறகு தோழிகளுடன் கூட்டு சேர்ந்து சிரிக்க நீங்கள் கருவியாகி விடுவீர்கள்.
எத சொன்னலும் நம்பனும்
அட, நம்ம ரஜினிதான் அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னலும் நம்பனும். இல்லா, நான் அறிவுல ரொம்ப ஸ்ட்ராங் என்றால், சண்டையும் ஸ்ட்ராங்காக வரும் பரவாயில்லையா???
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஒவ்வொரு, பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி… அதனால, நாங்கள் என்ன சொல்ல வரோம்-னா ஏதாவது அருவா வெட்டு, செருப்பு பிஞ்சு போறது போன்ற சம்பவங்கள் நேரிடும் பட்சத்தில் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.