Latest Post

ஜொர்ஜியாவில் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் 12 வயது சிறுமி, தன்னை உறவினர் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கினார் என கூறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை பேஸ்புக் லைவில் பதிவு செய்து பதற்ற நிலையை உண்டாக்கியுள்ளார். ஃபேஸ்புக் லைவில் வந்த கேட்லின் தனக்கு நடந்த சம்பவத்தை கூறி தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த காணொளிப்பதிவை பேஸ்புக் நீக்கி வருகிறது. ஆயினும், இது பல தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இதை தடுக்க முடியவில்லை என அப்பகுதி பொலிஸ் கூறியுள்ளது. கேட்லின் நிகோலின் தற்கொலை குறித்தும், பரவி வரும் காணொளிப்பதிவை எப்படி தடுப்பது என்பது குறித்தும் பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் பாலியல் குறித்தும், மன தைரியம் குறித்தும் விழிப்புணர்வும், ஆலோசனையும் குறைவாக இருக்கிறது. இது தான் இவர்கள் பல சமயங்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறான முடிவு எடுக்க காரணியாக அமைகிறது.

அப்பா, அம்மா வேலையில் பிஸியாக இருக்கின்றனர். தாத்தா, பாட்டி என்ற உறவு பலருக்கு கிடைப்பதில்லை. இப்படி பெரியோரிடம் ஈர்ப்பும், பற்றும், உறவும் என எதுவும் இல்லாத காரணத்தால் வாழ்வில் மதிப்பும், எதை எதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய புரிதலும் குழந்தைகள் மத்தியில் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பெற்றோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களை பற்றி முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும்.





பிரித்தானியாவில் இன்று நடந்த பயங்கர வெடிப்பு விபத்தில் 2 வீடுகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் முக்கிய நகரான மான்செஸ்டரின் Blackley என்ற இடத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த வீடும் அருகில் இருந்த மற்றொரு வீடும் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 3 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலிசாரும், மீட்பு படையினரும் அழைக்கப்பட்டு தீவிரமாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




தன் தந்தை, சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரை கோடரியால் வெட்டிக் கொலை செய்த பதினேழு வயது இளைஞனை ரஷ்ய பொலிஸார் கைது செய்தனர்.

அலெக்ஸாண்டர் என்ற இந்த இளைஞனின் தாய் மூன்று வருடங்களுக்கு முன் புற்றுநோய்க்கு பலியானார். தன் தாயின் மரணம் அலெக்ஸாண்டரை உலுக்கிவிட்டது. அன்று முதல் நண்பர்களைக் கூட ஒதுக்கிவிட்டு தனிமரமாக வாழத் தொடங்கியிருக்கிறார் அலெக்ஸாண்டர்.

இதனிடையே, அலெக்ஸாண்டரின் தந்தை விக்டர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். இது அலெக்ஸாண்டருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

(கொல்லப்பட்ட தந்தை, சகோதரி)

குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிடத் தீர்மானித்த அலெக்ஸாண்டர் சுமார் மூவாயிரம் யூரோக்களை தனது தந்தையிடம் கடனாகக் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன், இரவு நேரம் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் கோடரி ஒன்றைக் கையிலெடுத்த அலெக்ஸாண்டர், தந்தை, சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரின் அறைகளுக்குள் புகுந்து அவர்களை கோடரியால் கொத்திப் படுகொலை செய்தார்.

அலெக்ஸாண்டரைக் கைது செய்த பொலிஸார் அவரைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.





வியாபாரம் செய்வதற்காக மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி, அதில் நஷ்டம் அடைந்து தொழிற்துறையில் இருந்து காணாமல் போனவர்கள் ஏராளம்.

அப்படி நஷ்டத்தில் வீழ்ந்த தொழிலதிபர்களை மட்டுமல்ல சாதாரண மனிதர்களையும் குபேரனாக்கும் மூலிகைதான் சஞ்சீவி மூலிகை.

சஞ்சீவி மூலிகை, உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும்.

உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும், உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும், உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள்.

பேய், பிசாசு, மோகினி, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி யாவும் பறந்தோடும், இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) மூலிகை சித்தர்களால் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும். இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கின்றது இந்த சஞ்சீவி மூலிகை.

பிரேசிலில் உள்ள சிறையில் பழைய கைதிகளுக்கும் , புதிதாக வந்த கைதிகளுக்கும் இடையே பெரும் சண்டை மூன்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள். இதில் மொத்தமாக 30 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இதில் 3 பேரின் தலை வெட்டப்பட்டு துண்டுகள் வேறு இடத்தில் வீசப்பட்டுள்ளது. பொலிசார் உள்ளே சென்று நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை அது கட்டுக்கு அடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சில கைதிகள் மட்டும் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்கள். இருப்பினும் இன்னும் பல கைதிகள் கைகளில் ஆயுதங்களோடு அலைந்து திரிவதாகவும், பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.






பிரித்தானியாவின் செப்பல் வீதியில் வைத்து, வெள்ளிக்கிழமை இரவு 16 வயதுச் சிறுவன் ஒருவன் 12 வயது சிறுமையை பற்றைக்குள் இழுத்துச் சென்று கற்பழித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அச்சிறுவன் எப்படி இருப்பான் என்று சொல்ல, அதனை படமாக வரைந்துள்ளார்கள் புலனாய்வு துறையின்.

இதன் உதவியோடு பொலிசார் குறித்த சிறுவனை தற்போது கைதுசெய்து விசாரித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. சிறுவன் என்ற காரணத்தால் அவர்கள் பெயரை வெளியிடவில்லை எனவும். அவன் மேல் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக பொலிசார் ஆராய்ந்து வருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.