Latest Post

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.

குறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்த தேவையான நடவடிக்கைகளை கெற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த மாநாட்டுக்கு பேஸ் புக், கூகுள்,

சோசல் கெப்பிட்டல், இன்பொயிஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம்(25) விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், மழைதொடர்வதால் சீரற்ற வானிலை காரணமாக தரையிறக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளார்.

இந்தியாவில் கோவையில் பீளமேடுபுதூரில் வீட்டை எழுதி தர மறுத்த தந்தையை மகனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசியப்பன். 80 வயதான இவருக்கு பாலச்சந்திரன் என்ற மகன் உள்ளார்.

அம்மாசியப்பனுக்கு நகர் பகுதியில் 2 வீடுகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அம்மாசியப்பன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அம்மாசியப்பனின் மகன் பாலச்சந்திரன் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அம்மாசியப்பன் மரணம் குறித்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. விசாரணையில் பாலச்சந்திரன் கூறியதாவது, "என் தந்தை அம்மாசியப்பன் பேரில், சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. அதை என் பெயரில் எழுதி தருமாறு அவரிடம் பல நாட்களாக கேட்டு வந்தேன். ஆனால், அவர் என் பெயருக்கு எழுதித்தர மறுத்து விட்டார்.

அவரை கொலை செய்துவிட்டால், அவருக்கு பிறகு, அந்த இரண்டு வீடுகளும் எனக்கு வரும் என்பதால், அவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

சீனாவில் உள்ள ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்கள் இருந்தன. அவற்றை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

அதனால் 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 19 கட்டிடங்களை தகர்க்க, 5 டன் வெடிபொருட்கள் 19 கட்டிடங்களிலும் நிரப்பப்பட்டன. அவை கட்டிடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் வைக்கப்பட்டன. பின்னர் நள்ளிரவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. அதையடுத்து 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. அந்த கட்டிடங்கள் முறையே 7 முதல் 12 மாடிகளை கொண்டவை.

அவற்றில் ஒன்று 707 மீட்டர் உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது. ஹன்கூ வர்த்தக நகரமாகும். இங்கு இதுவரை 32 அடுக்குமாடி கட்டிடங்கள் இதே போன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் ஒரே நேரத்தில் இது போன்று அதிக கட்டிடங்கள் இடித்து தகர்க்கப்பட்டது.

 இதுவே முதல் முறையாகும். கட்டிடங்களை தகர்ப்பதற்கான பணிகள் சுமார் 4 மாதங்களாக நடைபெற்றதாக சீன என்ஜினீயரிங் அகாடமி நிபுணர் வாங்ஸுகுயாங் தெரிவித்தார். 19 கட்டிடங்களும் இடிக்கப்பட்டவுடன் ஏற்படும் புகையை கட்டுப்படுத்த தன்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் கூறினார்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன்,மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (23) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கடற்கரை பிரதேசமான சியாரா லியோன் என்ற பகுதில் வைத்தே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர், கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்க்குஸர்லாந்துக்குச் செல்வதற்காக, முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களைத் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (22) அவ்விளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக குறித்த பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா சண்முகம் ஆகியோருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிற்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ‌ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என, தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


சிதம்பரம், திருமண மண்டபத்தில், மது அருந்தி, போதையில் மாப்பிள்ளை கலாட்டா செய்ததால், அதிர்ச்சிஅடைந்த மணப்பெண், திருமணத்தை நிறுத்தினார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளையைச் சேர்ந்தவர், தர்மராஜன், 28; திருப்பூரில் உள்ள, பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார்.இவருக்கும், சிதம்பரம் அடுத்த, ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நேற்று காலை, சிதம்பரத்தில் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு, இருதரப்பு உறவினர்களும் மண்டபத்தில் கூடினர்.

இரவு மாப்பிள்ளை, நண்பர்களுடன் மது அருந்தினார். போதை ஏறியதும், சமையல் அறைக்கு சென்று, சமையல்காரர்களிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், சமைக்க முடியாது என, வெளியேறினர்.இதையடுத்து, மணப்பெண் - மாப்பிள்ளை வீட்டார் இடையே, தகராறு ஏற்பட்டு, நள்ளிரவு வரை வாக்குவாதம் நீடித்தது.

ஆவேசமடைந்த மணப்பெண், 'குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என தெரிவித்து, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன், நள்ளிரவே, தன் ஊருக்கு கிளம்பி சென்றார்.
நேற்று காலை, மாப்பிள்ளை தரப்பினர், மணப்பெண் திருமணத்தை பாதியில் நிறுத்தி சென்று விட்டதாக, சிதம்பரம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மோகன், இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். மணப்பெண், 'குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாது' என, கறாராக தெரிவித்து, காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
இதனால், நேற்று நடக்க இருந்த திருமணம் நின்றதால், மாப்பிள்ளை வீட்டாரும் சோகத்துடன் சென்றனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.