Latest Post

ராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும் என கணித்து கூறப்படும். அதில் இந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள் ராசிக்கு காதல், இல்லறம், நட்பு போன்றவை எப்படி அமையும், சமூக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்..

மேஷம்!
இந்த வருடம் மேஷ ராசிக்காரர்கள் அவர்களுடைய துணையை கண்டறிவது சற்று கடினம் தான். நீங்கள் ஒரு உறவில் இணைவதற்கான வாய்ப்பு குறைவு தான். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் இல்லறத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம். மன அழுத்தம் உண்டாகலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருங்கள், இது தான் உங்களுக்கான ஒரே வழி!

ரிஷபம்!
ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த வருடம் ரொமாண்டிக்கான வருடமாக அமையலாம். காதல் திருமணம் போன்றவை நன்றாக அமையும். லிவின் ரிலேஷன்ஷிப்-க்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மிதுனம்!
உங்கள் ராசிக்கு உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது போல காதல் வாழ்க்கை அமையும். உங்களுக்கு லக் என்றும் கூடவே இருக்கும். இந்த வருடம் நீங்கள் சமூகத்தில் இணைந்து செயல்படும் வகையில் அமையும்

கடகம்!
ஈர்ப்பான குணாதிசயங்கள் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக அமையலாம். திருமணம் ஆனவர்கள் வாழ்க்கையும் முன்பு இல்லாதது போல புரிதல் காணப்பட்டு சிறக்கும்.

சிம்மம்!
இரண்டாம் எண்ணம் ஏதும் இல்லாமல் சிம்ம ராசிக்காரர்கள் காதலில் விழுவார்கள். இல்லற வாழ்க்கையும் புன்னைகை தழுவி காணப்படும். எதையும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.

கன்னி!
நீங்களாகவே உங்களது மனநிலையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றிருந்தால் இவ்வருடம் உங்களுக்கான காதல் துணையை நீங்கள் காண முடியும். வினோதமான, ஆன்மீக நம்பிக்கை உடைய நபர்களுடன் காதல் வயப்படலாம்.

துலாம்!
இந்த வருடம் நீங்கள் சற்று குழப்பமாகவே இருப்பீர்கள். சற்று விட்டுகொடுத்து போவது நல்லது. ரொமான்ஸ் மற்றும் புரிதலில் கவனம் செலுத்தலாம்.

விருச்சிகம்!
இந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை ஏகபோகமாக அமையலாம். நட்பு, காதல், இல்லறம் என அனைத்தும் நன்றாகவே அமையும். சில நேரத்தில் நட்பா? காதலா என்ற நிலையும் ஏற்படும். சில குறுகிய கால உறவுகள் அமையவும் வாய்ப்புகள் உண்டு. எதற்கும் இந்த வருடமே ஒரு உறவில் நிலைத்து இணைந்துவிடுவது நல்லது.

தனுசு!
எதிர் பாலின நபர்களுடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு பிள்ளை செல்வம் கிட்டும்.

மகரம்!
இவ்வருடம் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சில தடைகள் உண்டாகலாம். வேறு நபர்களுடன் இணையும் நிலை ஏற்படலாம். தற்போதைய காதல் பிரிந்தாலும், வேறு நபருடன் நிலையான உறவு உண்டாகலாம். இந்த வருடமே திருமணம் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.

கும்பம்!
நிலையான சூழல் என்றில்லாமல், பல துணிச்சலான காரியங்கள் நடக்கலாம். திருமணம் ஆனவர்கள் துணையை கட்டாயப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க வைப்பது நல்லது. துணை மீதான அக்கறை கூடுதாலாக இருக்க வேண்டும்

மீனம்!
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் காதலுக்கு சிறப்பாக அமையும். இலகுவாக உணர்வீர்கள். முதலில் நீங்கள் பேச தயங்க கூடாது. சரியான தொடர்பு இல்லாமல் போனால் காதல் அமைவது கடினமாகலாம். எதற்கும் அவசரப்படாமல் அமைதியாக இருங்கள்.

மனிதர்கள் ஒரு வகை தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மனநிலை தான் பலவகை. ஒரே சூழலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கையாள்வது உண்டு. அதில் யார் சிறந்த முறையில் கையாள்கிறார்களோ அவர்களே அந்த காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

காதல் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உண்மையில் காதலில் தான் ஆண்கள் ஓர் சூழ்நிலையை பலவகைகளில் கையாள்கிறார்கள். இதனால் தான் காதல் எனும் போது நண்பர்கள் தரும் ஐடியாக்கள் பல வகைகளில் இருக்கின்றன…

நானும் ரவுடி தான் விஜய் சேதுபதி

அந்த பெண்ணுக்கு நாம் பேசுவது புரியுமா, நம்மை பிடிக்குமா? அவர் யார்? என்ன? என எதுவும் தெரியாமல் இம்ப்ரஸ் செய்ய முனையும் ஆண்கள்.

மெட்ராஸ் கார்த்தி
பெண்கள் விலகி, விலகி போனாலும், உருகி உருகி காதலிக்கும் ஆண்கள்.

பொல்லாதவன் தனுஷ்
தன் காதல் கதையை காதலிக்கும் பெண்ணிடம் கூறமால், உடைந்த ரேடியோ போல நண்பர்களிடம் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் ஆண்கள்.

பாஸ் ஆரியா

இம்ப்ரஸ் செய்ய முடியாமல், அந்த பெண்ணை விட்டு விலகவும் முடியாமல் விடா முயற்சி தான் விஸ்வரூப வெற்றி என வெறித்தனமாக துரத்தி துரத்தி காதலிக்கும் ஆண்கள்.

மௌனம் பேசியதே சூர்யா

காதலே வேணாம்… ஏண்டா லவ்வு, லவ்வு-னு சாவுறீங்க என அறிவுரை கூறும் ஆண்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு

வசனமாக பேசி இம்ப்ரஸ் செய்யும் நபர்கள், கட்டம் கட்டியாவது தூக்கிவிடும் குணாதிசயம் கொண்டவர்.

ஆடுகளம் தனுஷ்

ஆடம்பர பெண்ணை காதலிக்கும் மிடில் கிளாஸ் ரோமியோ.

அம்பி விக்ரம்

வருடக்கணக்கில் காதலை கூறாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் அப்பாவி அம்பி.

பூவே உனக்காக விஜய்

தன் காதல் நிறைவேறாமல் போனாலும், தான் காதலித்த பெண் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல உள்ளம் படைத்த ஆண்கள்.

காதல் மன்னன் அஜித்

தான் விரும்பும் பெண்ணுக்கு நிச்சயம் ஆயிருந்தாலும் கூட தன் காதல் மூலம் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்கும் ஆண்கள்.

குணா கமல்

பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கும் ஆண்கள். தன் காதல், காதலி தான் தன் உலகம் என இருப்பவர்கள்.

தளபதி ரஜினி

மூர்க்கத்தனமாக இருப்பினும், காதல் என்றால் உருகும் மனம் கொண்டவர்கள். கோபம் இருக்குமிடம் தான் அன்பு இருக்கும் என்பதற்கான அடையாளங்கள்.

பீப் சாங் சூப் பாய்ஸ்

காதல் தோல்வியில் பெண்களை திட்டித் தீர்க்கும் ஆண்கள்.

பரிசுகளை கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். இது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். மனம் நிறைந்து கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் மிகச்சிறந்தது. ஆனால் சில பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி தரக்கூடாது. அது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரலாம் தரக்கூடாது என்பது பற்றி காண்போம்.

யானை பொம்மை
ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது சிறந்தது. உங்களால் வெள்ளி அல்லது தங்கம் பூசப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தர முடியவில்லை என்றால், வெங்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தரலாம்.

துண்டுகள் மற்று கைக்குட்டை
துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறைப்பேர் பரிசாக தருகிறார்கள். ஆனால் இதனை வாஸ்து சாஸ்திரப்படி அன்பளிப்பாக தரக்கூடாது. இது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

கடிகாரங்கள்
கடிகாரங்களை பரிசாக தரும் பழக்கம் அதிகப்படியானோருக்கு இருக்கிறது. ஆனால் இவ்வாறு கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறையாக வாழ்நாளை குறைப்பதாக அமைகிறதாம்.

கூர்மையான ஆயுதங்கள்
கத்தி போன்ற எந்த ஒரு கூர்மையான ஆயுதங்களையும் பரிசாக தரக்கூடாதாம். இது கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இருவருக்கும் கெடுதலை உண்டாக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

மண்ணால் ஆன பொருட்கள்
இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்கள் போன்ற மண்ணால் ஆன பொருட்களை பரிசாக கொடுப்பது வாழ்நாள் மற்றும் பணத்தை அதிகரிக்க செய்யும். எனவே மண்ணால் செய்த அழகிய சிலைகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தரலாம்.

காலணிகள்
காலணிகளை தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். சூக்களை கூட பரிசாக வழங்க கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வேலை சம்பந்தமான பொருட்கள்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ அது சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுப்பது உங்கள் வேலை திறனை குறைக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், பேனா, புத்தகம் போன்றவற்றை பரிசாக கொடுக்க கூடாது.

வெள்ளி
வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லக்ஷ்மியை குறிக்கும்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள்
தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதாவது மீன் தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தருவது நமது அதிஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும்.

பூண்டு மருத்துவ குணங்கள் மிக்கது என்பதற்காக அதை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் ஏராளமான தீமைகளை சந்திக்க நேரிடும்.

பூண்டு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?

பூண்டில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளது, எனவே அவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் அதிகமாக பாதிப்படையும்.

பூண்டில் இருக்கும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்து, அது வாய்வாக மாறி, துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

பூண்டு அல்லது பூண்டு அதிகம் கலந்த உணவினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது வாந்தி மற்றும் நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்தும்.

உணவில் பூண்டை அதிகம் எடுத்துக் கொண்டால், ரத்தோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தம் உறையும் நேரத்தினை அதிகரிக்க செய்யும். இதனால் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளயிருப்பர்கள், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பூண்டு அதிகமாக சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

பூண்டில் உள்ள நுண்ணிய தாதுவான ஆலின் லயேஸ், சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பூண்டு மிக அதிகமாக உடலில் சேரும் போது, அது ஹைப்ஹீமா (hyphema) எனும் பாதிப்பை உண்டாக்கி, கண்களுக்கு உள்ளே இருக்கும் சேம்பரில் ரத்தக்கசிவை உண்டாக்கி, பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும்.

செவ்வாய் பகவான் துலாம் ராசிக்குள் பிரவேசித்துள்ளார். இந்த இடப் பெயர்ச்சியானது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வரை இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளுக்கும் என்ன பலா பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய். மேஷத்தில் செவ்வாய் நிற்க வேகம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விருச்சிகத்தில் நிற்க வேகம் சற்றே குறைந்திருக்கும். செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் தடங்களை ஏற்படுத்துகிறது. வைத்தீஸ்வரன் கோவில், பழனி முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.

குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான் என்பார்கள். செவ்வாய் பகவான் குரு உடன் சுக்கிர பகவானின் வீட்டில் அமர்ந்துள்ளார்.

செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். சுக்கிரன் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

இந்திய நேரப்படி நவம்பர் 30 டிசம்பர் 1ம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரவில் இந்த கிரகப் பெயர்ச்சி நடந்துள்ளது. மேஷம், விருச்சிகம் ராசிகளின் அதிபதி செவ்வாய் என்பார்கள்.
செவ்வாய் என்றாலே சக்தி. ஒருவருக்கு செவ்வாய் பலவீனமடையும்போது அவரும் சேர்ந்து பலவீனமடைகிறார். செவ்வாயானது துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளதால் மற்ற ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் அமர்ந்திருக்கிறார் செவ்வாய். மனைவியிடம் வாயைக் கொடுக்காதீர்கள். நேரம் சரியில்லை. சண்டை வரலாம். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். புத்திசாலித்தனமாக நடப்பது உத்தமம்.

ரிஷபம் சுக்கிரனின் வீடு. உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இதுவும் சுக்கிரனின் வீடு எனவே நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும்.

மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க.

கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

சிம்மம் ராசிக்கு 3வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்பபடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் நுழைந்துள்ளார். அடுத்த 20 நாள் கவனமாக இருப்பதுநல்லது. மனைவியுடன் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்து நல்லது.

துலாம் ராசியில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். அதேசமயம் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. மனைவியுடன் சண்டை வருமாம், கவனம் ப்ளீஸ்.

விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் செவ்வாய் இனி ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ளார் . திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதத்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும். அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கவனம் தேவை. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள்.

தனுசு ராசிக்காரர்களே இனி உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.

மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது. வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும்.

மீனம் ராசிக்கு 2 9 ம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.

தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல் இல்லாமல் ஒரு புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புனித நூல் இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தோற்றம் களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவை பொருத்த வரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும் வட இந்தியாவில் மாங்கல்சூத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.எது எப்படி இருப்பினும் இதன் முக்கியத்துவமும் இதன் பொருளும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தாலி என்பது மரியாதை, அன்பு, காதல் மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும் பெண்ணும் இணையும் திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அடையாளமாக உள்ளது. இது இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாகவும் கருதப்படுகிறது.

இந்த தாலி என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சியப்ப சிவசாரியாரின் கந்த புராணத்தில் இது இடம் பெற்று உள்ளது. அதற்கு அடுத்த படி 12 ஆம் நூற்றாண்டில் கம்பர் மற்றும் சேக்கிழார் போன்ற வர்கள் பெரிய புராணத்தில் இதைப் பற்றி கூறியுள்ளனர். இதன் படி தான் தாலி என்பது இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாலியின் வடிவமைப்பு பொதுவாக தாலி வெவ்வேறு வடிவமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. கடவுள் சிவபெருமானின் திருவுருவம் என்றால் 3 கிடைமட்ட கோடுகளை கொண்டும் கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் 3 செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் சாதி மத வேறுபாடுகளின் படி அவர்கள் தங்கள் திருமணத்தின் போது வெவ்வேறு விதமான தாலிகளை வடிவமைத்து கொள்கின்றனர். அறிவியல் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலு‌ம் பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும் படி அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

வட இந்தியாவில் இந்த தாலி என்பது கருப்பு மற்றும் தங்க மணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ் போன்று காணப்படும். இதில் உள்ள தங்க மணிகள் கடவுள் பார்வதி தேவியையும் கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்க மணிகள் செல்வத்தையும் சந்தோஷத்தையும் வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும் வளத்தையும் காக்கின்றனர். கருப்பு மணிகள் என்பவை கணவன் மனைவிக்கு இடையே உள்ள உணர்வுப் பூர்வமான பந்தத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் இந்த மாங்கல்சூத்திரா கண்திருஷ்டி போன்ற கெட்ட சக்திகளை ஒழிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது. மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காக்கிறது. இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்துப் பெண்கள் மிகவும் பயப்படுவர். கடவுளை வேண்டி தன் கணவரை காக்க வேண்டும் என்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் வழிபாடு மேற்கொள்வர்.

ஆனால் தற்போதைய மாடர்ன் வாழ்க்கையில் தாலி என்ற புனித நூல் சடங்குகள் மறைந்து வருகிறது. பெண்கள் எப்போதாவது தாலிகளை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும் போது அணிதல் போன்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமண பந்தத்தில் மாறி வருகிறது. இருப்பினும் இந்த தாலி என்ற புனித நூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.