Latest Post

ஒரு குழந்தையை உருவாக்க மூன்றுபேரின் மரபணுக்களில் இருந்து கருத்தரிக்கச் செய்யும் முறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் முதல் தடவையாக செய்திருக்கிறார்கள். தனது தாய் மற்றும் தந்தையின் மரபணுக்களை கொண்ட அந்த ஆண் குழந்தை மூன்றாவது கொடையாளி ஒருவரின் மரபணு மூலக்கூற்றையும் கொண்டிருக்கும். தனது தாயின் மூலம் அந்தக் குழந்தைக்கு வரக்கூடிய சில
உடற்குறைபாட்டை தவிர்க்க இந்த முறை உதவும். அபூர்வமான மரபணு குறைபாடுகளைக் கொண்ட ஏனைய குடும்பங்களுக்கும் இது உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.




சமீபத்தில் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய விந்தணு உற்பத்தி இல்லாததால், ஆண்கள் மலட்டு தன்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இப்படி போதிய விந்தணு உற்பத்தி இல்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை உண்ணும் உணவுகளும், வாழ்க்கை முறையும் தான்.

அதுமட்டுமின்றி, தற்போது ஆண்கள் அதிக வேலைப்பளுவின் காரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதுவும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடக்க ஆரம்பித்தால், அப்போது கெட்ட பழக்கங்களை விட்டு, அப்போது உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

அதிலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து வந்தால், திருமணத்திற்கு பின் குழந்தை பெற முயற்சிக்கும் போது, எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும், விலை குறைவில் கிடைக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.

டார்க் சாக்லெட்

ஆம், டார்க் சாக்லெட் சாப்பிட்டால் விந்தணுவின் உற்பத்தி அதிகரிக்கும். ஏனெனில் அதில் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டு வாருங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பாத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ப்ரோமெலைன் என்னும் நொதி நிறைந்துள்ளது. இவை ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் பல்வேறு வகையான புற்றுநோயை தடுப்பதில் இருந்து, விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வரை பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஏனென்றால் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இவை விந்தணுவின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் வைத்துக் கொள்ளும்.

பூண்டு

பூண்டுகளில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இவை பாலுறுப்புகளுக்கு இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எனவே ஆண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்து வருவது மிகவும் நல்லது.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் நோய்களின் தாக்கத்தை குறைப்பதுடன், விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும்.

கடல் சிப்பி

கடல் சிப்பியில் விந்தணுவின் உற்பத்திக்கு வேண்டிய அத்தியாவசிய அமினோ ஆசிட்டுகள், ஜிங்க் நிறைந்துள்ளது. ஆகவே ஆண்கள் இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வருவது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தால், அவை விந்தணுவின் உற்பத்தி மற்றும் இயக்கத்தை அதிகரித்து, வலிமையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மாட்டிறைச்சி

தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியில் ஜிங்க் அதிகம் நிறைந்துள்து. எனவே ஆண்கள் இதனை மாட்டிறைச்சியை அவ்வப்போது சேர்த்து வந்தால், விந்தணுவின் அளவு அதிகரிப்பதுடன், பாலுணர்ச்சியும் சற்று தூண்டப்படும்.

மாதுளை

மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்தத்தில் உள்ள கெமிக்கலை குறைக்கும். இந்த கெமிக்கலானது விந்தணுவை அழிக்கும் திறன் கொண்டது. எனவே மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், விந்தணு அழிவதைத் தடுக்கலாம்

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம்.

கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபனைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்தியாவில் யாரும் பார்க்கவில்லை.

பழங்கால நூல்களில் ஓரினச் சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. இதனை மனுதர்ம சாஸ்திரத்தில் கூட தண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லவில்லை.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

என்றாலும், வாத்ஸாயனர் காலத்தில் கூறப்பட்டுள்ள திருமணங்களில் காந்தர்வ திருமணம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. காந்தர்வ திருமணம் என்றால் காதல் திருமணம் என்று பொருள்.

அதன்படி ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதுபோல், ஆணும், ஆணுமோ அல்லது பெண்ணும், பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் ஓரினச் சேர்க்கை மிகப்பெரிய பிரச்சினையாக்கப்பட்டது.

சரி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு எப்படி அந்தத் தூண்டுதல் ஏற்படுகிறது? என்றால், பல மருத்துவ கருத்துகள் நிலவுகின்றன.

மரபணுக் கோளாறினால் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அதனை மருத்துவ உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாறினால் குழந்தைக்கு ஓரினச் சேர்க்கை விருப்பம் வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் குழந்தையின் ஹார்மோனை பரிசோதித்த போது, அதற்கான எந்த நிரூபணமும் இல்லை என்று மறுத்து விட்டது.

குழந்தைப் பருவத்தின் போது நெருக்கடியான சூழலில் வளர்வதால், மனப் பாதிப்பின் காரணமாக ஓரினச் சேர்க்கையில் நாட்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனையும் ஆய்வு செய்த மருத்துவ உலகினர் மறுத்துள்ளனர்.

வேறு தகவலின்படி, குழுவாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஓரினச் சேர்க்கை ஈடுபாடு இருந்தால், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் அந்த ஈடுபாடு உருவாகும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இவையெல்லாமே யூகத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமே கூறப்படுபவை என்று மருத்துவத் துறையினர் நிரூபித்து விட்டனர்.

எனவே பிறவியிலேயே ஓரினச் சேர்க்கையாளர்கள் அதில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

பல நேரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஏன் அதுமாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.

பலரு‌ம், வ‌ெ‌ண்ணெ‌ய் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு‌த் த‌ீ‌ங்கை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி, த‌ங்களது உண‌வி‌ல் வெ‌ண்ணையை‌ த‌வி‌ர்‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் வெ‌ண்ணை‌யிலு‌ம் ச‌த்து‌க்க‌ள் அட‌ங்‌கியு‌ள்ளன. ‌சில‌ர் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு அயோடி‌ன் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட்டா‌ல், வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வரலா‌ம்.

மேலு‌ம், வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள ஆ‌ன்டி ஆ‌க்‌சிட‌ன்‌ட்க‌ள் ர‌த்த நாள‌ங்களை‌ப் பல‌ப்படு‌த்து‌‌கி‌ன்றன. கா‌ல்‌சிய‌த்தை அ‌திகள‌வி‌ல் கொ‌ண்டு‌ள்ள வெ‌ண்ணை, ப‌ற்‌சிதைவை‌த் தடு‌க்‌கிறது.

வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள பூ‌ரித‌க் கொழு‌ப்பு, பு‌ற்றுநோயை‌த் தடு‌க்கு‌ம் த‌ன்மையை‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. அ‌த்‌தியாவ‌சியமான தாது உ‌ப்பு‌க்களை ந‌ம் உட‌ல் ‌கிர‌கி‌த்து‌க் கொ‌ள்ள வ‌ெ‌ண்ணை உத‌வி செ‌ய்‌கிறது. வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பு‌த் த‌ன்மை கூட, மூளை‌க்கு‌ம், நர‌ம்பு ம‌ண்டல‌த்து‌க்கு‌ம் ந‌ன்மையையே செ‌ய்‌கிறது.

இ‌தி‌ல் உ‌ள்ள வை‌ட்ட‌மி‌ன் ஏ க‌ண்க‌ள், தோ‌லி‌ன் ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம் கா‌க்க உதவு‌கிறது.

சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம்
40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.
100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
பயன்கள்:
1. சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.
2. பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
3. சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
4. பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.
5. இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.
6. மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.