ஒரு குழந்தையை உருவாக்க மூன்றுபேரின் மரபணுக்களில் இருந்து கருத்தரிக்கச் செய்யும் முறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் முதல் தடவையாக செய்திருக்கிறார்கள். தனது தாய் மற்றும் தந்தையின் மரபணுக்களை கொண்ட அந்த ஆண் குழந்தை மூன்றாவது கொடையாளி ஒருவரின் மரபணு மூலக்கூற்றையும் கொண்டிருக்கும். தனது தாயின் மூலம் அந்தக் குழந்தைக்கு வரக்கூடிய சில
உடற்குறைபாட்டை தவிர்க்க இந்த முறை உதவும். அபூர்வமான மரபணு குறைபாடுகளைக் கொண்ட ஏனைய குடும்பங்களுக்கும் இது உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உடற்குறைபாட்டை தவிர்க்க இந்த முறை உதவும். அபூர்வமான மரபணு குறைபாடுகளைக் கொண்ட ஏனைய குடும்பங்களுக்கும் இது உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.