தமிழ்நாட்டில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததால் 15 சிறுவனை, பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த சிறுவன் விசாகப்பட்டினத்தில் ரயில் ஏறி கட்டாக் வரை செல்ல முற்பட்டுள்ளான்.
பயணத்தின் போது பயணச்சீட்டு பரிசோதகர், சிறுவனிடம் பயணச்சீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
சிறுவனிடம் பயணச்சீட்டு இல்லாததால் கோபமடைந்த பரிசோதகர் அவனை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த ரயில்வே பொலிசார், பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள சிறுவனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
தற்போது சம்பவத்தின் போது ரயில் பணியாற்றி வந்த மூன்று பயணச்சீட்டு பரிசோதகர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.