இன்றைய தலைமுறை ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்களை அழகாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்காக ஜிம் சென்று தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதோடு, சரும அழகை அதிகரிக்கவும் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்களைப் போல் ஆண்களும் முகத்திற்கு க்ரீம்களைத் தடவுவது, ஃபேஸ் பேக் போடுவது என்றெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஆனால் தங்களது அழகை மேம்படுத்த ஒருசில எளிய செயல்களைப் பின்பற்றினாலே போதும்.
இங்கு ஒவ்வொரு ஆணும் தங்கள் அழகை அதிகரித்து வெளிக்காட்ட சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி அழகாக திகழுங்கள்.
டிப்ஸ் #1
சில ஆண்கள் தங்கள் மூக்கில் வளரும் முடியை ட்ரிம் செய்யாமல் வெளியே தெரியும்படி வைத்திருப்பார்கள். முதலில் அப்பழக்கத்தை மாற்ற வேண்டும். மூக்கில் வளரும் முடியை அவ்வப்போது ட்ரிம் செய்ய வேண்டும்.
டிப்ஸ் #2
பொதுவாக ஆண்கள் தங்களது கை மற்றும் கால்களில் வளரும் நகங்களை மாதத்திற்கு ஒருமுறை, அதுவும் நேரம் இருந்தால் வெட்டுவார்கள். ஆனால் அப்படி இருந்தால், அது பெண்களுக்கு உங்கள் மீது ஒரு கெட்ட அபிப்ராயத்தை உருவாக்கிவிடும். எனவே வளர்ந்து அசிங்கமாக இருக்கும் நகங்களை வாரத்திற்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.
டிப்ஸ் #3
அதிகமாக வியர்க்கும் ஆண்கள் தங்களது அக்குளில் உள்ள முடியை ட்ரிம் செய்ய வேண்டும். இதனால் அக்குளில் வியர்வை அதிகம் வெளிவருவது மற்றும் அழுக்குகள் சேர்வது குறையும். இதன் காரணமாக உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #4
ஆண்கள் ட்ரெண்டி ஹேர் ஸ்டைல் என்று பொருத்தமில்லாத ஹேர் ஸ்டைலைப் பின்பற்றுவதைத் தவிர்த்து, தங்களுக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைலைப் பின்பற்றினாலே, அழகாக காட்சியளிப்பார்கள்.
டிப்ஸ் #5
நல்ல வாசனைமிக்க டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக வியர்வை வெளிவரும். டியோடரண்ட்டுகளைத் தவிர்த்தால், அதனால் உடல் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். எனவே நாள் முழுவதும் நீடித்திருக்கும் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.
டிப்ஸ் #6
தேவதாஸ் போன்று நீளமாக தாடியை வைத்துக் கொள்ளாமல், அழகாக ட்ரிம் செய்யுங்கள். ஏனெனில் பெண்களுக்கு அளவாக தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும். எனவே அதனைப் பின்பற்றுங்கள்.
டிப்ஸ் #7
உதடுகளை வறட்சியுடன் வைத்துக் கொள்ளாமல், அழகாக வெளிக்காட்டும் வகையில் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு உதடு அதிகம் வறட்சியடைந்தால், லிப் பாம் பயன்படுத்துங்கள். இதனால் எந்த தவறும் இல்லை. பெண்கள் மட்டும் தான் லிப் பாம் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரச்சனையை சந்தித்தால் ஆண்களும் இதனைப் பயன்படுத்தலாம்.