முத்தமிடும் போது ஏன் கண்கள் தானாக மூடிக் கொள்கின்றன?

பெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் போது, ஏன் முத்தமிட்டுக் கொள்வது போல படத்தில் நடிக்கும் போது கூட கண்களை தானாக மூடிக் கொள்வார்கள்.

நீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ஏனெனில், நாம் உணர்ச்சி ரீதியான செயல்களில் ஈடுபடும் போது மனித மூளையில் தானாக உண்டாகும் செயல்பாடு இது என மனோதத்துவ நிபுணர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

மூளை வேலை செய்யாது 
மனோதத்துவ நிபுணர்கள், “பொதுவாகவே நமது மூளை ஒன்றாக பல வேலைகள் செய்யும் போது ஏதேனும் ஒன்றில் தான் கவனம் செலுத்தும். தொட்டு உணர்தல், முத்தமிடுதல் என நமது உடல் முத்தமிடும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களில் ஈடுபடும் போது அதிக கவனம் முத்தமிடுதலில் தான் குவிகிறது” என கூறுகின்றனர். இதன் காரணமாக தான் கண்கள் தானாக முத்தமிடும் போது மூடிக் கொள்கிறதாம்.

காட்சி வடிவம்
மேலும், பார்வை மற்றும் தொட்டு உணர்தல் குறித்த ஆய்வுகள், தொட்டு உணர்ந்து உணர்வை அனுபவிக்கும் போது நமது மூளை அதனை காட்சியாக, மன பிம்பமாக உருவகம் செய்ய தூண்டுகிறதாம். அதனாலும் கூட முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காட்சி திறன்
முத்தமிடும் போது ஜோடிகளின் மத்தியில் உண்டாகும் காட்சி திறனை வைத்து தான் கண்கள் மூடுவது கண்டறியப்படுகிறது என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது அந்தந்த ஜோடி மற்றும் அவர்களது உணர்ச்சி நிலை மற்றும் அளவு குறித்து மாறுப்படும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உணர்வு நிலை 
முத்தமிட்டுக் கொள்ளும் போது அந்த ஜோடிகளின் தொடுவுணர்வு எந்தளவிற்கு மேலோங்குகிறது என்பதை வைத்து தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தொடு உணர்வில் சிறிதளவு தாக்கம் ஏற்படினும் அதை சார்ந்து முத்தமிடுவதிலும் மாற்றங்கள் ஏற்படும்.

உதாரணமாக இறுக்கமான முறையில் அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென துணை தொடுதலை விடுத்துவிட்டால், முத்தமிடும் உணர்வில் இருந்து நீங்கள் வெளிவந்துவிடுவீர்கள்.

அல்லது இறுக்கம் அதிகரித்தாலோ, தீண்டுதல் வீரியம் அடைந்தாலோ முத்தமிடும் நேரம் அல்லது அளவு நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதை வைத்து அவர்கள் காட்சிப்படுத்தும் அளவையும் கூட கணக்கிட முடியுமாம்.

தொடு உணர்வு
முத்தமிடும் போது மட்டுமல்ல, உணர்ச்சிப் பூர்வமான எந்த ஒரு செயல்பாடாக இருப்பினும் மூளை காட்சி வடிவில் பிம்பத்தை உண்டாக்கி பார்க்கவே முனையும். இது உடலுறவில் ஈடுபடும் போது, கட்டியணைக்கும் போதென உணர்ச்சி ரீதியான எல்லா செயல்பாடுகளின் போதும் உண்டாகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் போது, ஏன் முத்தமிட்டுக் கொள்வது

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.