காதலினிடம் பேசும் சிலவற்றை தங்கள் தோழிகளிடம் பகிர்ந்துக் கொள்ளும் குணாதிசயம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சிலவன மிகவும் பர்சனலானது இதையெல்லாம் அவள் யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அவற்றையும் கூட அவர்கள் நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்களாம். சில சமயங்களில் இவற்றை பாதுகாப்பு கருதியும் பகிர்கிறோம் என பெண்கள் கூறுகிறார்கள்.
எரிச்சலூட்டும் வகையிலோ, கிறுக்குத்தனமாகவோ நீங்கள் ஏதாவது செய்தால் நக்கலாகவோ, கிண்டலாகவோ பேசும் போது தங்களது தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
காதலன் உடலுறவுக் குறித்து காதலியிடம் பேசினால் பர்சனல் என எண்ணி யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார் என நினைக்கலாம். ஆனால், அடிக்கடி இதுப்பற்றி பேசினால் உங்களை பற்றி கணக்கிட, நீங்கள் இதற்காக மட்டும் தான் பழகுகிறீர்களா அல்லது உறவில் நீடிப்பது நல்லதா என அறிந்துக் கொள்ள கூட தோழிகளுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள் பெண்கள்.
அழகாக இருந்தால் தோழி சைட் அடிக்க, வேடிக்கையாக இருந்தால் கலகலப்பாக பேச, முரடனாக இருந்தால் திட்டித்தீர்க்க என உங்கள் நண்பர்கள் எப்படி இருந்தாலும், அவர்களை பற்றிய தகவல்களையும் தோழிகளுடன் பேசும் போது பகிர்ந்துக் கொள்வார்கள்.
காதலனின் குடும்பத்தை பற்றி பெரும்பாலும் மேலாப்படி தான் பேசுவார்களாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு அப்படியே தலைகீழ் காலை எழுந்ததில் இருந்து மாலை முடிந்தது வரை அனைத்தையும் தோழியிடம் கூறி பாரத்தை இறக்கி வைத்துவிடுவார்களாம்.
காதலன் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறான், சேமிப்பு குறித்து மட்டும் தான் பேசுவார்களாம். பெரும்பாலும் பெண்கள் காதலனின் சம்பளம் பற்றி உண்மையை கூறுவதில்லை. கெத்து குறைந்துவிடும் என எண்ணுகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு குழந்தை குட்டிகள், வீடு வாகனம் வாங்குதல், செட்டில் ஆவது பற்றி நீங்கள் இருவரும் திட்டமிட்டு வைத்திருப்பது போன்றவற்றையும் கூட தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்வார்களாம்.