தாயை சிறந்ததோர் கோயிலும் இல்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு. பெற்றால் தான் பிள்ளையா, தாய் பாசமும், தாய்மையும், ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் தான் வருமா? இல்லவே இல்லை என நிரூபித்த பெண் தான் இவர்.
இவரை இந்த யுகத்தின் சிறந்த தாய் என்று கூறுவது கூட மிகையல்ல. ஒரு வினோத சரும கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையை நிஜமாகவே பொத்தி, பொத்தி வளர்த்திருக்கிறார் இந்த உன்னதமான தாய்...
ரோஜர் தாமஸ் மற்றும் டினா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்
இவர்கள் ஒரு மருத்துவமனையில் 'முய்' எனும் இந்த அழகான குழந்தையை எஉண்மையில் அந்த மருத்துவமனை முய்யை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்க தான் முடிவெடுத்தனர். ஆனால், அதை தடுத்து, ரோஜர் தாமஸ் மற்றும் டினா தம்பதி தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர்.
ஹார்லிகுவின் இக்தியோசிஸ் (Harlequin Ichthyosis) என்பது ஒருவிதமான அரியவகை சரும நோய். இந்த நோயால் தான் முய் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சரும நோய், மற்றவர்களை விட 10 மடங்கு சரும வளர்ச்சியை உண்டாக்கும். இதற்கு தீர்வோ மருந்தோ இதுவரை இல்லை. இந்த நோய், ஏதோ தீயில் எரிந்தது போன்ற தோற்றத்தை அளிக்கும் தன்மை கொண்டதாகும்.இந்த நோயாடும் முய் தன் அன்பான குடும்பத்தின் அரவணைப்போடு, தான் எதையும் சாதிக்க முடியும் என போராடினார். இவரது தோல் மிக வறட்சியாக, மீன் செதில்கள் போல, சீரற்று இருக்கும்.
இந்த ஹார்லிகுவின் இக்தியோசிஸ் சரும நோயால், அடிக்கடி, கொப்பளங்கள், தொற்று போன்றவை அதிகமாக முய்யிடம் தென்படும். இதற்காக இவர் நிறைய நேரம் வெளியே போகாமலேயே இருக்க நேரிடம்.
இதை எல்லாம் தாண்டி இன்று முய் ஒரு ரக்பி ரெப்ரீயாக இருக்கிறார். ஊக்கமளிக்கும் பேச்சாளராக ஜொலிக்கிறார். நிறைய சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டி.
சின்ன, சின்ன தடைகள், தோல்விகள் கண்டு நம்மில் பலர் மனம் முடிந்து போகிறோம். ஆனால், வெளியே எட்டிப்பார்க்க முடியாத நிலையிலும், உலகம் தன்னை எட்டிப்பார்க்க வைத்திருக்கிறார் முய். ரோஜர் தாமஸ் மற்றும் டினா போன்ற பெற்றோர் இருந்தால், முய் போன்று குழந்தைகள் நிச்சயம் ஜொலிப்பார்கள், ஜெயிப்பார்கள்.டுத்து வளர்க்க முன்வந்தனர்.