அமெரிக்கா பல ரகசியமான (நூதனமான) கடல் போர் கருவிகளையும், தளபாடங்களையும் உற்பத்தி செய்து வைத்துள்ளது. ஹவ்வாய் தீவுகளில் உள்ள அமெரிக்க கடல்படை தளத்தில் இருந்து நேற்றைய தினம்(31) அமெரிக்கா எண்ணை அகழும் குதம் போன்ற மிதக்கும் தாக்குதல் கப்பல் ஒன்றை அனுப்பியுள்ளது. இது நகர்ந்து சென்று வட கொரியாவுக்கு அருகில் உள்ள கடலில் தரித்து நிற்கும் எனவும். வடகொரியாவில் இருந்து அமெரிக்கா நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை இது உடனே அறிந்து , ஏவப்படும் ஏவுகணையை நடு வானில் வெடிக்க வைக்க கூடியது என்றும் கூறப்படுகிறது.
இத்தாக்குதல் கப்பலின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிலையமான "பெண்டகன்" இது நாள் வரை வெளியிட்டதே இல்லை எனலாம். பெரிய வட்ட பந்துபோன்ற ஒன்று இதில் இருப்பதாகவும். அதுவே ராடர் என்றும் கூறப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்த இந்த ராடர் கருவி ஏவுகணைகளை இலகுவாக கண்டறியும் எனவும். மேலும் அதில் உள்ள ஏவுகணை தாக்கி அழிப்பு கருவி ஒரு செக்கனுக்கு 100 சிறிய ரக குண்டுகளை வீசவல்லது என்கிறார்கள். இதனால் அவ்வழியே செல்லும் எந்த ஒரு ஏவுகணையையும் இக் கருவி வீழ்த்தி விடும்.
மேலும் இதனை கடலில் வைத்து விமானத்தால் தாக்கி அழிக்கவும் முடியாது. காரணம் என்னவென்றால் , ஏவுகணையையே சுட்டு வீழ்த்தும் இச்சாதனம் விமானத்தை சும்மா விடுமா ? இல்லையே. அதனையும் தாக்கி அழித்து விடும். இதனால் வட கொரியா இதுவரை காட்டி வந்த பூச்சாண்டிகளுக்கு அமெரிக்கா இலகுவாக ஒரு முடிவுகட்டியுள்ளது.