அண்ணியுடன் கள்ளக்காதல்; வேறொரு பெண்ணுடன் திருமணம் - மனைவி தர்ணா

வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்க இருப்பதை அறிந்த மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கார்மேகம் என்பவருக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் நித்யா (27) என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், கடந்த 2 வருடமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யா தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நித்யா தனது கணவர் ஊருக்கு மீண்டும் திரும்பி வந்து, சீனிவாசன் என்பவரது வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், இது குறித்து கூறியுள்ள நித்யா, தனது கணவர் கார்மேகத்துக்கும், அவரது அண்ணன் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததது. ஆனால், அதனை மறைத்து இந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனது கணவர் திருமணத்துக்கு பிறகும் அவரது அண்ணியுடன்தான் நெருக்கமாக பழகியதாகவும், தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை அறிந்து, தனக்கு திருமணம் செய்து வைத்த பெரியவர்களிடம் நியாயம் கேட்பதற்காக தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்க இருப்பதை அறிந்த மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.