துபாயில் தனது முன்னாள் காதலியைத் தாக்கி, காதைக் கடித்ததாக, 34 வயதான இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தான் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, தன்னை சந்தேகநபர் பின்னால் இருந்து தாக்கியதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட வேளை, காதின் சிறு பகுதியை சந்தேகநபர் கடித்து விட்டதாகவும் முறைப்பாட்டார் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த நபருடன் தனக்கு தொடர்பு இருந்ததாக குறிப்பிட்ட அப் பெண், பின்னர் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
எனினும் சந்தேகநபர் தன்னைத் தொடர்ந்து வந்து தாக்குவதோடு, பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக, 36 வயது நிரப்பிய அப் பெண் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வழக்கு விசாரணையின் போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதேவேளை அடுத்த கட்ட வழக்கு விசாரணை நவம்பர் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.