திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து சென்ற, பெண்ணொருவர் தன் காதலனுடன் 2ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் ராமு, கூலித் தொழிலாளி. இவருடைய மகள் துர்கா ( 21), குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் வீதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் கேசவன் (24) இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் துர்காவின் வீட்டுக்கு தெரிய வந்த நிலையில், பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறொருவரு க்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் துர்காவை அவரது பெற்றோர் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
ஆனால் தான் காதலித்த நடராஜனை கைப்பிடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்துள்ளார். கணவருடன் வாழ பிடிக்காமல் காதலனுடன் சேரும் ஆசையில் துர்கா கடந்த 6ஆம் திகதி மாலை கணவனின் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ள தோழிகளின் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டில் உள்ளோர் நினைத்துள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் துர்கா வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்திலும், தோழிகள் வீட்டிலும் விசாரணை செய்துள்ளார். இருப்பி னும் துர்கா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் துர்காவை தேடி வந்தனர்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய துர்கா, 7 ஆம் திகதி காலையில் தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது பொலிஸாரும், உறவினர்களும் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் சென்றுள்ளனர். பொலிஸார் அவர்களை பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது துர்கா பொலிஸாரிடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர்களை பொலிஸார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.