Latest Post

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று.

எத்தனை பொறுப்புகள் !
எத்தனை சுமைகள் !
எத்தனை தியாகங்கள் !
எத்தனை ஏமாற்றங்கள் !
எத்தனை கடமைகள் என்று…

நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய் பார்த்தீர்கள்.
ஆனால் இங்கு, என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை.

எனக்கு பிடிக்காததையும், பிடித்ததை போலவே நடித்துக்கொண்டிருக்கிறேன்.
யாராவது என்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. பண்டிகை காலத்திலும், என் பிறந்த நாட்களிலும் நீங்கள் தேடி தேடி வாங்கி தந்த ஆடைகளை இங்கு நான் உடுத்த முடியாமல் காட்சி பொருளாய் கிடக்கிறது.

அவற்றை அனைத்துக்கொண்டே உங்களது பாசத்தினை சுமந்து வருகிறேன் அம்மா.
உங்களிடம் சண்டையிடும் பொழுது, நான் உரிமையோடு சத்தம் போட்டால் , என்னை திட்டுவதை விட்டுவிட்டு நீங்கள் அமைதியாய் செல்வீர்கள். ஆனால் இங்கு எனக்கு வலி ஏற்பட்டாலும் மௌனம் காக்கிறேன்.

சில நேரங்களில் உன்னிடம் இருந்த போதே நான் மகிழ்வாக இருந்தேனே! உன்னோடு வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது. உன் மடியில் படுத்துக்கொள்ளவேண்டும் எனவும் தோன்றுகிறது.
எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பில் இருந்திடக்கூடாதா என்று நினைக்கிறன்.

ஆனால் அடுத்த கணமே நீயும் என் வயதில் என்னை போலத்தானே உணர்ந்திருப்பாய். நீ உன் திருமணத்தில் செய்த தியாகம் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளை கொடுத்திருக்கிறது.

நீ அன்று நான் நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா? நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் எதிர்பாரா அன்பையும், நான் திருப்பி தர வேண்டாமா என்று நினைத்துக்கொள்கிறேன்.

அப்படி நினைக்கும் பொழுது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது. காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்துவிடுவேன்.

இனி நானும் நீ செய்த தியாகங்களை என் குடும்பத்திற்கு செய்ய தயாராகிவிடுவேன். ஆமாம் நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகிவிட்டேன்.
நன்றிம்மா!!!
என்றும் அன்புடன் உன் ஆசை மகள்…..

சூரியனைச் சுற்றி 9 கோள்கள் வலம் வந்தாலும், பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளது என்று முதலில் விஞ்ஞானிகள் கூறினார்கள். ஆனால் எல்லா கிரகங்களை விட செவ்வாய் கிரகம் மீது விஞ்ஞானிகளுக்கு அதீத ஆர்வம் ஒன்று இருந்து வருகிறது. இது பல வருடங்களாக நீடித்தும் வருகிறது. இதன் பின்னணியில் ரகசியமாக ஒரு விடையம் உள்ளது. 

பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள், செவ்வாய் கிரகத்தில் சில உயிரினங்கள் வாழ்ந்து பின்னர் மறைந்துவிட்டதாக. செய்வாய் கிரகமும் உறை நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தில் தான் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும். பின்னர் பல ஆண்டுகள் கழித்து தான் பூமியில் பிறந்துள்ளதாகவும் ரஷ்ய சிறுவன் ஒருவன் கூறியுள்ளான்.

பொறஸ்கா கிப்பிரியா- நோவிக் என்னும் இச் சிறுவன். பிறந்து 2 மாதங்களில் பேசக் கற்றுக் கொண்டான் என்றும். 1 வயதில் சரளமாக பேசுவல்ல இவன், படங்களை நேர்த்தியாக வரையவும் கற்றுக்கொண்டான். இதனால் அப்போது மருத்துவ உலகமே அதிர்ந்து போனது. ஆனால் இன்னும் சில பழைய நினைவுகள் தனக்கு வந்துள்ளதாக கூறும் அச்சிறுவன், ஒரு காலத்தில் செவ்வாயில் மனிதர்களை போன்ற ஒரு உயிரினம் வாழ்ந்து வந்ததாகவும். அவர்கள் 35 வயதோடு "வயதாகும்" நிலையை தடுத்து (மார்கண்டேயர் போல )வாழ்ந்ததாகவும் கூறுகிறார். 

செவ்வாயில் இருந்த மனிதரை போன்ற உயிரினங்கள் பெரும் விஞ்ஞான வளர்ச்சி கண்டிருந்ததாகவும். அவர்கள் மனிதரைக் காட்டிலும் பெரும் வளர்ச்சியடைந்திந்ததாகவும் அவன் கூறுகிறான்.
செய்வாய் கிரகத்தில் இருந்தவர்கள் தமக்குள் தாமே மோதி இனத்தை அழித்தது மட்டுமல்லாது. அக்கிரகத்தையே அழித்தார்கள் என்றும் கூறியுள்ள அச் சிறுவன். சிலர் மட்டும் மண்ணுக்கு அடியில் தற்போதும் மறைந்து வாழ்வதாகவும் கூறுகிறான். 

செய்வாய் கிரகத்தில் இருந்த உயிரினங்கள், பூமியில் உள்ள எகிப்த்து நாட்டவர்களோடு தொடர்பில் இருந்தார்கள் என்றும். அதன் இரு அடையாளமே எகிப்த்து நாட்டில் உள்ள "கிரேட் ஸ்பிங்ஸ் குன்று" Great Sphinx என்கிறான் அச்சிறுவன். ஏலியன் முகத்தையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட அபூவர் சிலை ஒன்று, குன்றின் உயரத்தில் உள்ளது. இதனை இதுவரை காலமும் எகிப்த்திய நாடு ஆராயவில்லை. 

இதில் பல மர்மங்கள் புதைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுவதோடு. அதனுள் உள்ள சக்தி உலகை அழிக்க வல்லது என்றும் சிலர் நம்புகிறார்கள்.
ஆனால் குறித்த சிலையின் காதுகளில் , உலகில் மற்றைய கதவை திறக்கும் மர்மம் ஒன்று இருப்பதாக இச் சிறுவன் கூறுவதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பல மதங்கள் மறுபிறப்பை நம்புவது இல்லை. 

ஆனால்
சைவர்கள் அதன் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். குறித்த கிறிஸ்தவச் சிறுவன் கூறும் தகவல்கள். அவன் விண் வெளியை வரைந்து காட்டும் விதங்கள். விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. விண் வெளி சென்றுவந்த வீரர்கள் கூட இவ்வளவு நுணுக்கமாக கூறமுடியாத சில தகவல்களை இச்சிறுவன் கூறுகிறான்.

ஜோதிடத்தில் எந்தக் கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தை குரு பார்க்க நேரிட்டால், கெட்ட தோஷம் அடியோடு நீங்கிவிடும்.

நவக்கிரகங்களுக்கு மேலான குரு பகவான் பிரம்மாவின் பேரன் என்று புராணம் கூறுகிறது. இந்த குரு பலம் ஒருவரின் திருமணம் போன்ற மங்களகரமான காரியங்களுக்கு அடிப்படையாக அமைகிறது.

ஒருவர் ஜாதகத்தில் குருவும், கேதுவும் இணைந்து அமைந்திருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பதுடன் ஒருநாள் கோடீஸ்வரர் ஆவார் என்று ஜோதிடம் கூறுகிறது.

ரிஷபம் லக்னமாக அமைந்து, பாக்கிய ஸ்தானமான 5-ம் வீட்டில், அதாவது கன்னி ராசியில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால், அந்த ஜாதகத்தை உடையவர் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும்?

நடுவிரல், சனி விரல் என்று அழைக்கப்படும் விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது.

விரலின் கீழ் காணப்படும் வட்டத்துக்கு சனி வளையம் என்று பெயர்.

ஒருவரின் கையில் நடுவிரலில் சனி வளையம் அமைந்து, அந்த வளையத்தில் இருந்து சிறு ரேகைகள் மேல் நோக்கிச் செல்லும்.

அதே சமயம் விதி ரேகை, கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நிற்கும் அல்லது சனி மேட்டில் முட்டி நிற்கும்.

இவ்வாறான கைரேகை அமைப்பு அனைவருக்கும் அமையாது. ஆனால் இப்படி உள்ளவர்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டு என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.

பொதுவாக ஒருவரது ஜாதகத்தை அவர் பிறந்த தேதி மற்றும் நேரத்தை கொண்டு கணக்கிடுவது வழக்கம். அதை வைத்து அவரின் குணநலன்கள் அனைத்தையும் அறியமுடியும். ஆக ஒருவர் பிறந்த தேதிக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிஷ்டம் சேரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

முதலில் நீங்கள் பிறந்த தேதி ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை அதை கூட்டவும். உதாரணமாக நீங்கள் பிறந்த தேதி 19 என்றால் 1 + 9 = 10 இதில் 10 என்பதும் இரட்டை இலக்க எண் ஆகையால் அதையும் பிரித்து கூட்டவேண்டும் 1 + 0 = 1. பிரித்து கூட்டியதில் இறுதியாக நமக்கு கிடைத்த எண் ஒன்று. ஆகையால் 19 ஆம் தேதியில் பிறந்தவர்கள் 1 ஆம் எண்ணிற்குரிய பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 1 எனில்

1,10,19,28 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் மரத்தால் செய்த புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பது சிறந்தது. புல்லாங்குழலில் நுழையும் காற்று எப்படி இசையாக மாறுகிறதோ அதுபோல அவர்களது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் அவர்களுக்கு இறுதியில் மகிழ்ச்சியையே தரும்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 2 எனில்

2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வெள்ளை நிறத்தால் செய்யப்பட்ட ஏதேனும் பொம்மையை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருப்பது நல்லது. இப்படி செய்வதன் மூலம் அந்த பொம்மை அவர்களின் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 3 எனில்

3,12,21,30 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய பொருள் ருத்ராட்சம். இவர்கள் தங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் ஒரு முழு ருத்ராட்சத்தை வைப்பது சிறந்தது. இதனால் வீட்டில் நிம்மதி நிலைக்கும்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 4 எனில்

4,13,22,31 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் ஒரு நிலைக்கண்ணாடியை வீட்டின் தென்மேற்கு திசையில் திசையில் வைப்பது நல்லது. இதன் மூலம் அந்த வீட்டில் நல்ல நிகழ்வுகள் ஏற்படும். தென்மேற்கு திசையில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியை எப்போதும் உடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 5 எனில்

5,14,23 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் படத்தையோ அல்லது லட்சுமி படத்தையோ வைத்திருப்பது நல்லது. குபேரர் படம் என்பது சிரிக்கும் புத்தர் படமோ பொம்மையோ அல்ல. உன்மையான குபேரர் படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் சேரும்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 6 எனில்

6,15,24 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் மயில் இறகு. வீட்டின் தென்கிழக்கு திசையில் இவர்கள் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம் எப்போதும் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்கும்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 7 எனில்

7,16,25 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் ருத்ராட்சம். வீட்டின் தென்கிழக்கு திசையில் இவர்கள் ருத்ராட்சம் வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நிம்மதி நிலவும். இவர்கள் வைத்திருக்கும் ருத்ராட்சமானது நல்ல கருஞ்சிவப்பு ருத்ராட்சமாக இருக்கவேண்டும்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 8 எனில்

8,17,26 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டின் தென் திசையில் கருப்பு நிற கிரிஸ்டலை வைத்திருப்பது சிறந்தது. இப்படி செய்வதன் மூலம் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து எதிர்மறை ஆற்றல் குறையும். இதனால் வீட்டில் பல நல்ல விடயங்கள் நிகழும்.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 9 எனில்

9,18,27 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் பிரமீடு. வீட்டின் தென் திசையில் இவர்கள் பிரமீடு வடிவத்தில் ஏதேனும் ஒன்றையோ அல்லது பிரமிடையோ வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நல்ல எண்ணங்கள் நிலைத்திருக்கும்.

நாங்களும் நல்லா தானடா இருக்கோம், எங்கள ஒருத்தியும் பாக்க மாட்றா? என்று சுப்ரமணியபுரம் சசிகுமாரை போல் ஃபீல் பண்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான விடை. இதுக்கு எல்லாம் அவங்க பிறந்த ராசி தான் காரணமாம்!
ஒவ்வொருவர் பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும் என்கிறது நமது ஜோதிடம்.

வாழ்க்கை என்பது அவர்களுடைய தோற்றம், பேசும் திறன், பழகும் பண்பு போன்றவை. அதில் குறிப்பிட்ட ராசியில் பிறந்த ஆண்கள் அவர்களது அழகான ஆளுமை, நடத்தை, பேசும் பண்புகளின் மூலம் பெண்களை அதிகம் கவரக்கூடியவர்களாம். சரி, அதில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்று பாக்கலாமா?

இந்த ராசியில் பிறந்த ஆண்கள் கவர்ச்சிகரமானவர்கள்

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் பார்ப்பதற்கு வசீகரமான தொற்றத்தை கொண்டவர்களாகவும், பெண்களின் கவனத்தை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் அவர்களது கடைக் கண் பார்வை மூலமே ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.
இவர்களைச் சுற்றி எப்பொழுதும் அன்பையும், பாசத்தையும், காதலையும் பொழியும் பெண்கள் இருப்பார்களாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் காதல் மன்னனாக வலம் வருவார்களாம். மேலும் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாகவும், தனது பேச்சுத் திறனால் அனைவரையும் கவரக் கூடியவர்களாகவும், பெண்களின் மனதைப் படிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்களாம். இந்தப் பண்புகளினால் பெண்களைக் கவரும் ஆண் ராசிகளின் வரிசையில் முதலில் இருப்பது மிதுனம்.

சிம்மம்
அடுத்த இடத்தில் இருப்பது சிம்ம ராசி ஆண்கள். மற்றவரைப் புரிந்து நடப்பதிலும், உறவுகளை வலுப்படுத்துவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்களாம்.
இயற்கையாகவே சிம்ம ராசியில் பிறந்தவர்கள் செல்வாக்கு கொண்டவர்களாகவும், அடக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பெண்களிடம் வழிந்து பேசும் போதும் அதுவும் பல பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் அளவாகப் பேசும் திறமை படைத்தவர்களாம்.
குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்கக் கூடியவர்கள் இந்த ராசியில் பிறந்தவர்கள். இதைத் தவிர ஒரு லட்சிய பிடிப்புடன் இருக்கும் இவர்களது இயல்பு பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

துலாம்
அடுத்த இடத்தில் இருப்பது துலாம் ராசி ஆண்கள். பெண்களுடனான உறவுகளை இவர்கள் மதித்து நடப்பதைப் பார்த்தே பல பெண்கள் இவர்களை விரும்புவார்களாம்.
பேச்சு திறமையும் இவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் தானாம், மேலும் இவர்கள் காதலிக்கும் பெண்ணை மற்றவர்கள் போறாமைப் படும் அளவிற்கு உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்களாம்.
இவர்களிடம் பேசினால் அனைத்தையும் மறந்து இவர்களது பேச்சிற்கே அடிமையாகி விடுவோமாம், இதுவே இந்த ராசியைப் பெண்களை கவரும் ராசிகளின் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது.

மேஷம்
நான்காவதாக இருக்கும் ராசி மேஷம். மேஷ ராசி ஆண்கள் அனைவரையும் கவரும் முக அமைப்பும், உடல் தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுடைய இந்த வசீகரமே பல பெண்களை இவர்களை நோக்கி இழுக்குமாம். இவர்கள் ஒரு தலை சிறந்த காதலர்களாம், ரசித்து ரசித்துக் காதல் செய்யக் கூடியவர்கள் மற்றும் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர்களும்.
மேஷ ராசி ஆண்கள் கவர்ச்சிகரமானவர்களாக மட்டும் இல்லாமல் புத்திசாலிகளாகவும் இருப்பவர்கள் என்பதால் இது அவர்களுக்குக் கூடுதல் பலம்.
ராசி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்கள் மத்தியில் எப்படி முன் நிறுத்துகிறோம் என்பதிலேயே அவர்களது கவர்ச்சி அடங்கியுள்ளது.
நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் சரி பெண்களை அதிகம் கவரும் ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன், பெண்களை மதியுங்கள்.
காதலியாக, தோழியாக, சக மனிதியாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், இதுவே பெண்களை அதிகம் கவரும் ஒன்றாகும்.
தனக்கும் தனது கனவு மற்றும் எண்ணங்களுக்கு மரியாதை கொடுக்கும் எந்த ஆணையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள்.

அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

கணவன் மீது மனைவிக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாக!
ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள்.
அதில் சில இங்கு…

செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.
சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம்.

இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே ‘செல்’லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே ‘ஆன்’ செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக ‘அந்த’ நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது.

அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள்.

எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும்

செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.

மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.

முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் – அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள்.

உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு ‘பர்மிஷன்’ கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும்.

மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.

இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.