செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த சிறுவன் பூமியில்: புட்டு புட்டுவைத்த தகவலால் விஞ்ஞானிகளே குழப்பத்தில்

சூரியனைச் சுற்றி 9 கோள்கள் வலம் வந்தாலும், பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளது என்று முதலில் விஞ்ஞானிகள் கூறினார்கள். ஆனால் எல்லா கிரகங்களை விட செவ்வாய் கிரகம் மீது விஞ்ஞானிகளுக்கு அதீத ஆர்வம் ஒன்று இருந்து வருகிறது. இது பல வருடங்களாக நீடித்தும் வருகிறது. இதன் பின்னணியில் ரகசியமாக ஒரு விடையம் உள்ளது. 

பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள், செவ்வாய் கிரகத்தில் சில உயிரினங்கள் வாழ்ந்து பின்னர் மறைந்துவிட்டதாக. செய்வாய் கிரகமும் உறை நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தில் தான் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும். பின்னர் பல ஆண்டுகள் கழித்து தான் பூமியில் பிறந்துள்ளதாகவும் ரஷ்ய சிறுவன் ஒருவன் கூறியுள்ளான்.

பொறஸ்கா கிப்பிரியா- நோவிக் என்னும் இச் சிறுவன். பிறந்து 2 மாதங்களில் பேசக் கற்றுக் கொண்டான் என்றும். 1 வயதில் சரளமாக பேசுவல்ல இவன், படங்களை நேர்த்தியாக வரையவும் கற்றுக்கொண்டான். இதனால் அப்போது மருத்துவ உலகமே அதிர்ந்து போனது. ஆனால் இன்னும் சில பழைய நினைவுகள் தனக்கு வந்துள்ளதாக கூறும் அச்சிறுவன், ஒரு காலத்தில் செவ்வாயில் மனிதர்களை போன்ற ஒரு உயிரினம் வாழ்ந்து வந்ததாகவும். அவர்கள் 35 வயதோடு "வயதாகும்" நிலையை தடுத்து (மார்கண்டேயர் போல )வாழ்ந்ததாகவும் கூறுகிறார். 

செவ்வாயில் இருந்த மனிதரை போன்ற உயிரினங்கள் பெரும் விஞ்ஞான வளர்ச்சி கண்டிருந்ததாகவும். அவர்கள் மனிதரைக் காட்டிலும் பெரும் வளர்ச்சியடைந்திந்ததாகவும் அவன் கூறுகிறான்.
செய்வாய் கிரகத்தில் இருந்தவர்கள் தமக்குள் தாமே மோதி இனத்தை அழித்தது மட்டுமல்லாது. அக்கிரகத்தையே அழித்தார்கள் என்றும் கூறியுள்ள அச் சிறுவன். சிலர் மட்டும் மண்ணுக்கு அடியில் தற்போதும் மறைந்து வாழ்வதாகவும் கூறுகிறான். 

செய்வாய் கிரகத்தில் இருந்த உயிரினங்கள், பூமியில் உள்ள எகிப்த்து நாட்டவர்களோடு தொடர்பில் இருந்தார்கள் என்றும். அதன் இரு அடையாளமே எகிப்த்து நாட்டில் உள்ள "கிரேட் ஸ்பிங்ஸ் குன்று" Great Sphinx என்கிறான் அச்சிறுவன். ஏலியன் முகத்தையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட அபூவர் சிலை ஒன்று, குன்றின் உயரத்தில் உள்ளது. இதனை இதுவரை காலமும் எகிப்த்திய நாடு ஆராயவில்லை. 

இதில் பல மர்மங்கள் புதைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுவதோடு. அதனுள் உள்ள சக்தி உலகை அழிக்க வல்லது என்றும் சிலர் நம்புகிறார்கள்.
ஆனால் குறித்த சிலையின் காதுகளில் , உலகில் மற்றைய கதவை திறக்கும் மர்மம் ஒன்று இருப்பதாக இச் சிறுவன் கூறுவதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பல மதங்கள் மறுபிறப்பை நம்புவது இல்லை. 

ஆனால்
சைவர்கள் அதன் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். குறித்த கிறிஸ்தவச் சிறுவன் கூறும் தகவல்கள். அவன் விண் வெளியை வரைந்து காட்டும் விதங்கள். விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. விண் வெளி சென்றுவந்த வீரர்கள் கூட இவ்வளவு நுணுக்கமாக கூறமுடியாத சில தகவல்களை இச்சிறுவன் கூறுகிறான்.
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.