Latest Post

11 வயது சிறுமி இங்கிலாந்தின் மிக இளம் தாயார் ஆகிறார். இளம் தாயாகும் 11 வயது இங்கிலாந்து சிறுமி லண்டன்: இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்.

அந்த வகையில் இங்கிலாந்தில் 11 வயதில் ஒரு சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தைக்கு இவளை விட ஓரிரு வயதே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விரைவில் குழந்தை பெற இருக்கும் 11 வயது சிறுமி இங்கிலாந்தின் இளம் தாய் ஆகிறாள். இதற்கு முன்பு 12 வயதில் குழந்தை பெற்ற தெரசா மிடில்டன் என்ற சிறுமி இளம் தாய் என்ற பட்டம் பெற்றாள். கடந்த 2014-ம் ஆண்டு இவள் குழந்தை பெற்றாள். அக்குழந்தையின் வயது 13. தெரசா தற்போது 2-வது குழந்தையை பெற தயாராக இருக்கிறார்.

சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பல் ஒன்றில் கள்ள நோட்டு வந்ததாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விரைந்து சென்று துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சோதனையிட்டுள்ளனர்.

அதில் ஒரு கண்டெய்னரில் ரூ.2000 புதிய நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து துறைமுகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். துறைமுகத்தில் இருக்கும் 15 ஆயிரம் கண்டெய்னரிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

துறைமுகத்திற்கு வெளியே உள்ள வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் துறைமுகத்தின் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ஜெனிவாவில், மார்ச் 22-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 2009-ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, அந்நாட்டு அரசு மேலும் 18 மாத காலம் அவகாசம் கேட்க உள்ளது. இதனை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து சர்வதேச விசாரணை கோரி வந்ததை இலங்கை மறுத்துவரும் நிலையில், தற்போது உள்நாட்டு விசாரணையையும் தாமதப்படுத்திவருகிறது.

இதைக் கண்டித்து, வைகோ சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, 'ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மாநாட்டில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்படக்கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் பலன்கள், பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் நம் முற்பிறவி பலன் தான் என ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு பிறவியில் நாம் செய்யும் தவறின் பலனை ஏழு ஜென்மங்களுக்கு அனுபவிப்போம் என பெரியவர்கள், ஞானிகள் சொல்ல கேட்டிருப்போம்.

துர்மரணம் அடைந்தவர்கள், பல பாவங்களை செய்து இறைவனின் சாபத்தினை பெற்றவர்களே மீண்டும் பிறக்கின்றனர் எனவும் கூறுகின்றனர்.

அறிவியலில் இது நிரூபிக்க இயலாத உண்மை, எனினும் உலகில் பெரும்பாலானோர் இதனை நம்பி அதற்காக பரிகாரமும் செய்கின்றனர்.

முந்தைய பிறவியின் பாவத்தினை போக்குவதற்காக முன்னோர்கள் பல வழிமுறைகள் கூறியதோடு அதற்காக பல கோவில்களையும் கட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயத்திற்கு சென்று வழிப்பட்டால் முன் ஜென்மபாவங்கள் நீங்கும், புதுவீடு கட்டுவதற்கான யோகம் கிடைக்கும்.

அக்னிக்கு உருவசிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இது தான். அப்பர், சம்பந்தர், திருநீலநாயனார், சிறு தொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய பாவங்களை போக்கும் புண்ணிய தளமாகும்.

இக்கோவிலில் அம்மனுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் எனவும், கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால் சனி தோஷம் தீரும் என்றும் நம்பப்படுகிறது.


சதய, ஆயில்ய நட்சத்திரத்திலும், தனுசு ராசியில் பிறந்தவர்களும் ஒரு முறையாவது இக்கோவிலுக்கு சென்றுவந்தால் பிறவி பலனை அடைவர். கன்னி ராசிகாரர்கள் கட்டாயம் செல்லவேண்டும்.

இங்கு உள்ள சித்தரின் சமாதியில் 18 சித்தர்கள் அமர்ந்து வழிப்பட்டதால் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுகிறது.

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.

இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என கூறுகின்றனர்.

தாய்லாந்தின் திருநங்கை ஒருவர் தமது சக போட்டியாளர்கள் 27 பேரை வென்று இந்த ஆண்டின் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.

உலக அளவில் மிக பிரபலமானதும் திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப் போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது.

இதில் 24 வயதாகும் தாய்லாந்தின் Jiratchaya Sirimongkolnawin என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.

இறுதிப் போட்டியில் பங்குபெற்ற மொத்தம் 27 திருநங்கை அழகிகளில் இருந்து தாய்லாந்தின் Jiratchaya Sirimongkolnawin வெற்றி பெற்றுள்ளார்.

திருநங்கைகளை போற்றும் வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு குறித்த போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் திருநங்கைகளுக்கான மிஸ் சர்வதேச அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தாய்லாந்து 4 முறை வெற்றிவாகை சூடியுள்ளது. தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 2 முறையும், வெனிசுலா, பிரேசில், தென் கொரியா, ஜப்பான், மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் வென்று சாதித்துள்ளது.

குறித்த போட்டியில் பங்குபெறும் திருநங்கைகள் பிறக்கும்போது கண்டிப்பாக ஆணாக பிறக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம்.

இந்த ஆண்டின் அழகியாக வெற்றி பெற்றுள்ள Jiratchaya Sirimongkolnawin பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். தற்போது மொடலாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சேர்ந்த பிரபல கார் ரேஸர் அஸ்வின் சுந்தரும் அவர் மனைவியும் கார் விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் அஸ்வின் சுந்தர் (31), பிரபல கார் ரேஸ் வீரரான இவர் 2003ல் இருந்து 2013ம் ஆண்டு வரை கார் ரேஸ்களில் பல சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டமும், ஐந்து முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

இவருக்கும் நிவேதாவிற்கும் கடந்தாண்டு பிப்ரவரி 16ம் திகதி தான் திருமணம் நடைபெறுள்ளது.

திருமணமாகி ஒரு வருடம் முடிந்த நிலையில் அதை கொண்டாடுவதற்காக நட்சத்திர ஹொட்டலுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர்.

பட்டினப்பாக்கம் சாந்தோம் சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது, அதே வேகத்தில் தீப்பிடித்தும் எரிந்துள்ளது.

அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போதும், எரிபொருள் அதிகம் இருந்ததால் சுமார் மூன்று மணிநேரமாக கார் பற்றி எரிந்துள்ளது.

காருக்குள் சிக்கிக் கொண்ட அஸ்வின், நிவேதாவும் பரிதாபமாக பலியாகினர், இருவரின் சடலமும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.