சென்னையை சேர்ந்த பிரபல கார் ரேஸர் அஸ்வின் சுந்தரும் அவர் மனைவியும் கார் விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் அஸ்வின் சுந்தர் (31), பிரபல கார் ரேஸ் வீரரான இவர் 2003ல் இருந்து 2013ம் ஆண்டு வரை கார் ரேஸ்களில் பல சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டமும், ஐந்து முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
இவருக்கும் நிவேதாவிற்கும் கடந்தாண்டு பிப்ரவரி 16ம் திகதி தான் திருமணம் நடைபெறுள்ளது.
திருமணமாகி ஒரு வருடம் முடிந்த நிலையில் அதை கொண்டாடுவதற்காக நட்சத்திர ஹொட்டலுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர்.
பட்டினப்பாக்கம் சாந்தோம் சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது, அதே வேகத்தில் தீப்பிடித்தும் எரிந்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போதும், எரிபொருள் அதிகம் இருந்ததால் சுமார் மூன்று மணிநேரமாக கார் பற்றி எரிந்துள்ளது.
காருக்குள் சிக்கிக் கொண்ட அஸ்வின், நிவேதாவும் பரிதாபமாக பலியாகினர், இருவரின் சடலமும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.