15,000 கண்டெய்னரில் கள்ள நோட்டு.? சென்னை துறைமுகத்திற்கு சீல்.!

சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பல் ஒன்றில் கள்ள நோட்டு வந்ததாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விரைந்து சென்று துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சோதனையிட்டுள்ளனர்.

அதில் ஒரு கண்டெய்னரில் ரூ.2000 புதிய நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து துறைமுகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். துறைமுகத்தில் இருக்கும் 15 ஆயிரம் கண்டெய்னரிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

துறைமுகத்திற்கு வெளியே உள்ள வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் துறைமுகத்தின் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.