கிளிநொச்சியில் உல்லாசமாக யுவதியுடன் இருந்த ஆமியை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் தாயுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 2.00 மணியளவில் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருடம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதிக்கு இராணுவச் சிவில் அதிகாரியாக இருந்த லெப்டினன் சுரங்க என்னும் இராணுவ அதிகாரி அப்பகுதி மக்கள் வீடுகளுக்குச் சென்று மக்கள் தொடர்பான குடும்ப விபரங்களைப் பெற்றுள்ளார்.

அவ்வேளை பாதிக்கப்பட்ட மேற்படி யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசிப்பதைத் தெரிந்து அந்த யுவதிக்கு தாம் உதவுவதாக நாடகமாடி அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

அத்துடன் அவ் யுவதியைத் திருமணம் செய்வதாகக் கூறி, மிரட்டித் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ;்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இதை அறிந்த அப்பகுதிக் கிராம மட்டப் பொது அமைப்புக்கள் இவ்விடயம் தொடர்பில் அந்த இராணுவ அதிகாரியிடம் கேட்ட வேளை, தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும் அவரையே தான் திருமணம் செய்யப் போவதாகவும்,

இவ்விடயத்தில் நீங்கள் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் அதை விட்டு எங்கள் விடயத்தில் தலையிட்டால் நடப்பது வேறு எனவும் மிரட்டும் பாணியில் கூறியுள்ளார்.

தற்போது கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள போதும் அந்த இராணுவ அதிகாரி ஊற்றுப்புலத்திலுள்ள மேற்படி யுவதியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து இரவில் தங்கி நின்று விட்டுச் செல்வதை அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அவதானித்துள்ளனர்.

மேலும் இவர் பற்றிய விபரங்களை, அறிந்த போது அவர் ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் திருகோணமலை புளுக்குணாவ என்னுமிடத்தில் அவரது குடும்பம் வசிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மேற்படி இராணுவ அதிகாரி நேற்றைய தினம் இரவு ஊற்றுப்புலத்திலுள்ள யுவதியின் வீட்டில் தங்கி நின்றதை அறிந்த அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உடனடியாகவே இராணுவப் பொலிஸாருக்கு (சீ.சீ.எம்.பி) தகவல் வழங்கி முறையிட்டு விட்டு அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

நேற்றிரவு 2.00 மணியளவில் அங்கு சென்ற இராணுவப் பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட யுவதியை இன்றைய தினம் காலை அக்கராயன் இராணுவ முகாமுக்கு இராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட யுவதியிடம் அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இவ்விடயம் பற்றி கேட்ட போது, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி அந்த இராணுவ அதிகாரி தன்னை வற்புறுத்தி மிரட்டியதாகவும் இது பற்றி தான் தனியே வாழ்வதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்ததாகவும் தன்னை இராணுவம் மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் மேற்படி யுவதி பலதடவைகள் அச்சுறுத்தப்பட்டவர் போல மிகவும் பயந்த நிலையில் காணப்படுகின்றார்.

தமிழ் மக்கள் வாழ்விடங்களை இராணுவத்தினர் அபகரித்து மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் இராணுவப் படை முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளமையால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இராணுவத்தினர் மக்கள் மத்தியில் தங்கியிருப்பதால் இப்படியான சம்பங்கள் பல இடம்பெற்றுள்ளன.

இதனால்தான் தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு இராணுவம் வெளியேறி, தமிழ் மக்கள் வாழ்வியலின் மீது இராணுவம் தலையிடுவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைத் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நீண்ட காலமாகக் கோரி வருகின்றார்கள்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.