வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மகப்பேற்று விசேட நிபுணத்துவ வைத்தியர் ஒருவரிடம், இரண்டு பிள்ளைகளின் தாய் 10 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகப்பேற்றுக்காக கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்ட எம்.சீ.ரீ.டி பெரேரா என்ற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே சட்டத்தரணியின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையை ஈன்றெடுத்த குறித்த தாய், கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்றுவலி உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சையின் பின்னர் குறித்த பெண் வயிற்று வலி குறித்து வைத்தியரிடம் கூறிய போதிலும் உரிய பரிசோதனை எதனையும் செய்யாத வலி நிவாரணிகளை மட்டும் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில மாதங்களாக வயிற்று வலி மற்றும் ஏனைய உடல் உபாதைகளினால் அவதியுற்ற குறித்த பெண், வேறு ஒர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட போது, அறுவை சிகிச்சையில் ஒரு தொகுதி பஞ்சு வயிற்றுக்குள் வைத்து வயிற்றை தைத்துள்ளமை கண்டறியப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி குறித்த சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடலின் ஒரு பகுதியையும் வெட்டி அகற்ற நேரிட்டதாகவும், சில மாதங்களாக தாய்ப்பால் ஊட்ட முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக பெருமளவு செலவிட நேரிட்டதாகவும் உடல் உள ரீதியாக பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டதாகவும் குறித்த பெண் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக தமக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.