முகநூலுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்பு

#Kalmunai
advertisement

வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினர் இன்று(23) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தினை வடக்கு பிரதேச சபைக்கு முன்பாக கல்முனை திருகோணமலை பிரதான வீதியை மறித்து நடாத்தியுள்ளனர்.

பிரதேச சபை ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து பிரதேச சபை நுழை வாயிலை மூடி இரண்டு மணி நேரம் கடமை செய்யாது வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

அண்மையில் வாகரை பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள், மட்டக்களப்பு மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை விமர்சித்து போலி முகநூல் பக்கத்தில் வெளிவந்த செய்தியை எதிர்த்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது செயலாளர் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களை களங்கப்படுத்தாதே, எமது பிரதேச சபையின் பெயருக்கு பங்கம் விளைவிக்காதே, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடாதே,

நல்லாட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதே, பிரதேச சபையின் முதுகிலே குத்தாதே, குள்ள நரி கூட்டங்களை உடனடியாக கைது செய் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

போலியான முகநூலில் பிரதேச சபைக்கு எதிராக வெளியிட்டவரை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரி பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுச சனத் பியதாஸ மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி ஆகியோரிடம் மகஜரையும் வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது சபையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்ரபில் பிரதேச சபை ஊழியர்களால் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிகளை இனங்கண்டு கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுச சனத் பியதாஸ தெரிவித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பிரதேச சபை நுழை வாயிலை திறந்து ஊழியர்கள் கடமைக்கு சென்றள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.