குபேர பொம்மையை நம்புகிறவரா நீங்கள்?... குபேர பொம்மை பற்றிய உண்மைகள்!..

குபேர பொம்மையை அழகுக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதை கடவுளாக மதிக்கின்றனர். அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

* வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் குபேர பொம்மையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.

* குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதம், வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கும் நிலை அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்கள் மனதிற்க்கு உறுதியை கொடுக்கும்.

* கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிட்ட உதவிடும். அதேப்போல் தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறை எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

* குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேணாலும் வைக்கலாம். தென் கிழக்கு திசையில் வைத்தால் எதிர்ப்பாராத அதிர்ஷ்டமும், நிறைவான வருமானமும் கிடைக்குமாம்.

* சிரித்து கொண்டிருக்கும் அந்த பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைவதோடு, பிரச்சனைகளை எதிர் நோக்க புது நம்பிக்கை பிறக்கிறது.

* புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர் எனவே இதை இழிவு படுத்தவோ அவ மரியாதை ஏற்படுத்தவோ கூடாது.

குபேர பொம்மையை அழகுக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதை கடவுளாக மதிக்கின்றனர். அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.