தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது .
சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை .
சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது .
“பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” சங்கமறுவியகாலத்தில் ….
கரணம் என்றால் “கிரியை” -முறையில் திருமணம் .
ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி வைத்து செய்ய வேண்டி நேர்ந்தது ?
சங்க காலத்தின் இறுதியில் அந்த தூய காதல் அசுத்தப்பட்டமையே காரணம் .
“நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த தான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்” இது ஒரு அபலைப்பெண்ணின் குரல் .
இந்த அடிகள் கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் பெண்ணை கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது.
ஆகவே கிரியை முறை திருமணம் தேவைப்பட் டது .
தாலி பற்றி …………………..
தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது
தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும் .
அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள் .
தாலி பொருளாகுபெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது .
பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.
தமிழனின்பண்பாடு கலாசாரம் போன்றவற்றை விபரிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கருத்து அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை உண்டு .
ஆக மொத்தத்தில் சங்கமருவிய காலமான கி.பி.3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலேயே திருமண கிரியை முறைகள் நடைமுறையில் இருந்தன என அறியக்கிடக்கின்றது .