மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.
திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும்.
குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை பாதிப்பு.
பொதுவாக, குழந்தை இல்லையென்றதும் பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல குற்றமும் ஆகும்.
குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம். எனவே, இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும். பெரும்பாலும் சரி செய்துவிட முடியும். அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து உடலுறவு கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.
இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது. குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாட்கள் என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு கொள்ளும்போது வெளியேறிய விந்து பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும். அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய நாள்களும் விலக்கப்பட வேண்டும்.
பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இந்த விவரம் அறிந்திருந்தால் தேவையில்லாமல் பெண் கருவுறவும், கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ வேண்டிய நிலை வராது!