சிறு வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என தள்ளிப் போட்டுவிடுவார்கள். ஆனால், மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும், ஆண், பெண் இருவரும் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சரியானது.
இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வதால் கணவன் மனைவியின் தாம்பத்திய உறவில் இருந்து, குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம் என பல வகைகளில் இல்லறம் சார்ந்த நன்மைகளை பெற முடியும்.
நாட்கள் இருக்கும்
குழந்தைகள் பெற்றுக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை ஒருவரை, ஒருவர் மிகுதியான காதலால் மூழ்கடித்து வாழ்க்கையை மிக சந்தோசமாக அனுபவிக்க நேரம் இருக்கு
பணம் பற்றிய கவலை இல்லை
இருவரும் சம்பாதிக்கும் பட்சத்தில் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வதால் பணம் பற்றிய கவலை இருக்காது. மேலும், உடனக்குடன் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்காது. இதனால், நீங்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை எந்த கவலையும் இன்றி வாழ முடியும்.
உடல்நலம் 
இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள். இதனால், உங்களது இல்லற வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், தற்போதைய காலநிலையில் நாற்பதை தொடும் முன்னரே நோய்கள் நம்மை தொட்டுவிடுகிறது.
வாழ்க்கையை திட்டமிடுதல் 
இருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால், வாழ்க்கையை பற்றிய திட்டமிடுதலுக்கு மிகுதியான நேரம் கிடைக்கும்.
குழந்தை வளர்ப்பு 
குழந்தை வளர்ப்பதில் எந்த சிரமும் இருக்காது. இருபதின் கடைசி அல்லது முப்பதுகளில் குழந்தை எனது பெண்களுக்கு சற்று சிரமமான காரியம். ஆகவே, இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சிறந்தது.
வாழ்க்கையின் இறுதி நாட்கள் 
வாழ்க்கையின் கடைசி நாட்களை நீங்கள் மகிழ்ச்சியுடன் சேர்ந்து ஆரோக்கியமாகவும் கழிக்க இது பயனளிக்கும். ஏனெனில், இதன் மூலம் நீங்கள் ஐம்பதுகளில் தெம்பாக வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போதே உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாட முடியும்.

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என தள்ளிப் போட்டுவிடுவார்கள். ஆனால், மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும், ஆண், பெண் இருவரும் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சரியானது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.