பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் உணவுப் பொருட்கள்…..

உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமைய விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்த்துப் போராடும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள்.

திருமணமான புதிய தம்பதியர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவது, உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தைப் பெற உதவும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் பல பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் நல்ல மனநிலையை உணர வைக்கும் டோபமைன் என்னும் கெமிக்கல் மூளையில் இருந்து வெளியிடப்படும். மேலும் இந்த கெமிக்கல் உற்சாகம், ஈர்ப்பு மற்றும் நன்னிலை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டவும் செய்யும்.

நட்ஸ்களில் உள்ள அர்ஜினைன், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். அதிலும் பாதாமில் உள்ள அமினோ அமிலங்கள், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

அத்திப்பழம் கூட மிகவும் சிறந்த பாலுணர்வைத் தூண்டும் உணவுப் பொருள். இதில் கரையக்கூடிய மற்றம் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இப்பழத்தை உட்கொண்டால், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியும்.

மாதுளை ஜூஸை ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் குடித்து வந்தால், பாலுணர்ச்சி அதிகரிக்கும். மேலும் இப்பழம் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்து, பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் உட்பொருள், இதயத் துடிப்பை அதிகரிப்பதோடு, உடலில் வெப்பம் மற்றும் வியர்வையைத் தூண்டும். உடலினுள் வெப்பம் அதிகரித்து பாலுணர்வும் அதிகரிக்கும்.

பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்து வர, பிறப்புறுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் உட்கொண்டால், உடலுறவில் முழு இன்பத்தையும் காணலாம்.

அஸ்வகந்தா என்னும் பாரம்பரிய மூலிகை வேர், மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்க நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

வாழைப்பழத்தில் புரோமெலைன் என்னும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் உட்பொருள் உள்ளது. மேலும் இதில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் பொட்டாசியம், உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.

பூண்டு மிகவும் சிறந்த ஓர் பாலுணர்ச்சியைத் தூண்டும் பொருள். இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும். அதே சமயம் இதனை அதிக அளவில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

முட்டைகளில் வைட்டமின் பி6 மற்றும் பி5 ஏராளமாக நிறைந்துள்ளன. இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு வந்தால், மன அழுத்தம் குறைவதோடு, பாலியல் உணர்ச்சிகளும் அதிகரிக்கும்.

மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மூளையில் டோபமைன் அளவை அதிகரித்து, உணர்ச்சிகளைத் தூண்டும். எனவே நீங்கள் உங்கள் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்ட ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

பாலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கால்சியம் பெண்கள் கருவுற மிகவும் அத்தியாவசியமானது. மேலும் இது பெண்களின் ஓவுலேசன் சுழற்சியை சீராக பராமரிக்க உதவும். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகவும் பருகக்கூடாது. இல்லாவிட்டால் அது உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

ஆளி விதையிலும் மீனுக்கு இணையாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, படுக்கையில் முழு இன்பத்தைக் காண உதவும்.

கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் கருவுற உதவுவதோடு, பாலுறவில் பேரின்பம் காண உதவும்.

ஒயின் இதய நோய் வரும் வாய்ப்பைக் குறைப்பதோடு, சரும அழகை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள்ளு ஒன்று. இத்தகைய ஒயின் பிறப்புறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்தது, பாலுணர்வைத் தூண்டி, உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும்.

உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமைய விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்த்துப் போராடும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள்.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.