அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இணையத் தொகுப்பில் காலப்பயணம் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
1950 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முப்பது வயது மிக்க ருடோல்ஃப் ஃபென்ட்ஸ் என்பவர் கார் விபத்தில் மரணித்தார். மரணித்தவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கார் விபத்தில் மரணித்த ருடோல்ஃப் 1876 ஆம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனது தெரிய வந்தது.
மான்டௌக் விமான நிலையத்தில் பரிமாணங்களுக்கிடையே அமைந்திருக்கும் சுரங்கங்கள் ஆய்வாளர்களை 1943 ஆம் ஆண்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.
ஆய்வகங்களில் பணியாற்றிய நினைவுகளை நினைவு கூறும் போது ப்ரெஸ்டன் பி. நிக்கோலஸ் மற்றும் அல் பெய்லக் என்ற ஆய்வாளர்கள் 1980களில் இதனைத் தெரிவித்தனர்.
பென்சில்வேனியாவின் பிலாடெல்ஃபியா கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்கக் கப்பல் படையினர் மேற்கொண்ட ஆய்வு தான் பிலாடெல்ஃபியா ஆய்வு என அழைக்கப்படுகின்றது.
அமெரிக்கக் கப்பல் படையின் யுஎஸ்எஸ் எல்ட்ரிட்ஜ் போர் கப்பல் 10 விநாடிகள் பின்னோக்கி பயணித்ததாகக் கூறப்படுகின்றது. இந்தப் பயணத்தில் பலர் மரணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் விமானப் படை அதிகாரியான சர் விக்டர் கொடார்டு தனது விமானத்தை எடின்பர்க் பகுதியில் கைவிடப்பட்ட ட்ரெம் விமானத் தளத்தின் மேல் பறந்து கொண்டிருந்தார். மீண்டும் அதே வழியில் திரும்பும் பொழுது கைவிடப்பட்ட ட்ரெம் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு அங்கு நான்கு மஞ்சள் நிற விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.
பின் 1939 ஆம் ஆண்டு ராயல் விமானப் படை செயல்படத் துவங்கி அதன் விமானங்கள் மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டன. ஒரு வேலை விக்டர் அவ்வழியாகத் திரும்பும் போது எதிர்காலத்தைக் கடந்து வந்தாரா என்ற கேள்வி இன்றளவும் எழுகின்றது.