கும்பகர்ணன் 6 மாதங்கள் தொடர்ந்து தூங்க காரணம் என்ன?

இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் என்ற பாத்திரம், வருடத்தின் 6 மாதங்களை தூங்கியும், விழித்திருக்கும் மற்ற 6 மாதங்களில் சாப்பிட்டும் நேரத்தை கழித்து வந்தார் என்பதை நாம் அறிந்திருப்போம்.

கும்பகர்ணன் முனிவர்களையும், சாதுக்களையும் சாப்பிடுவார் என்று நம்பப்படுகிறது. அவர் எதை சாப்பிட்டாலும் அவருடைய பசி மட்டும் அடங்கியதே இல்லை.

சரி, கும்பகர்ணன் ஏன் 6 மாதங்கள் தொடர்ந்து தூங்குகிறார் என்பதற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா? அந்த கதையைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

கும்பகர்ணன்

கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். அரக்கனைப் போல தோற்றமளித்தாலும் புத்தி சாதூர்யத்திலும் மற்றும் இதயத்திலும் மேம்பட்டவர் கும்பகர்ணன்.

இராமாயணத்தில் இராவணன் இராமருடன் போரிட்ட போது, மூத்த சகோதரர் என்ற முறையில் கும்பகர்ணனை அணுகி இராமருக்கு எதிரான போரில் வெற்றி பெற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சகோதரனுக்காக போரில் இறங்கிய கும்பகர்ணன்

ஆனால், இராவணன் போர் ஏற்பட்ட சூழலை கும்பகர்ணனுக்கு விளக்கிய போது, இராவணன் செய்வது தவறு என்று எடுத்துரைத்தார்.

இராவணன் தன்னுடைய ஆலோசனையை கேட்காத போது, சகோதரன் என்ற முறையில் இராமருக்கு எதிராக போரில் இறங்கினார் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் பற்றிய பின்னணி தகவல்களைத் தெரிந்து கொண்டோம், இப்பொழுது இந்த கட்டுரையின் தலைப்பில் உள்ளதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

இந்திரன்

தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, கும்பகர்ணனின் புத்திசாலித்தனத்தையும், வீரத்தையும் கண்டு பொறாமை! எனவே, கும்பகர்ணனை பழி வாங்க தக்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

யாகம்

இராவணன், கும்பகர்ணன் மற்றும் விபீஷணன் ஆகிய 3 சகோதரர்களும் பிரம்ம தேவரின் அருள் பெறுவதற்காக யாகம் செய்தார்கள்.

வரம் அல்லது சாபம்

இவர்களுடைய யாகத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர்ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில், அவர்கள் எதிர்பார்த்த வரம் இந்திரனின் ஆசனமான ‘இந்திராசனா’ என்ற வரமாகும், ஆனால் கும்பகர்ணன் ‘நித்ராசனா’ என்ற வரத்தைக் கேட்டார்.

கும்பகர்ணனின் குழப்பம்

இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனாவை கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன் தன் தவறை உணர்ந்தார். இந்த நேரத்தில் பிரம்ம தேவர் ‘தந்தேன்’ என்று சொல்லி விட்டார்.

எனினும், பிரம்ம தேவரிடம் இந்த வரத்தை நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கேட்டார் கும்பகர்ணன், ஆனால் பிரம்மனால் தன்னுடைய வரத்தைத் திரும்பப் பெற முடியாது.

இந்திரனின் குறுக்கு புத்தி

கும்பகர்ணன் மேல் பொறாமை கொண்டிருந்த இந்திரன், சரஸ்வதி தேவியிடம் சென்று கும்பகர்ணனை ‘இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனத்தை கேட்கச் செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

கும்பகர்ணனின் தூக்கம்

இந்த நாளிலிருந்து 6 மாதங்கள் தூங்கவும், விழித்திருக்கும் 6 மாதங்களில் எதிர்வரும் அனைத்தையும் சாப்பிடவும் தொடங்கினார் கும்பகர்ணன்!

இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் என்ற பாத்திரம், வருடத்தின் 6 மாதங்களை தூங்கியும், விழித்திருக்கும் மற்ற 6 மாதங்களில் சாப்பிட்டும் நேரத்தை கழித்து வந்தார் என்பதை நாம் அறிந்திருப்போம்.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.