ஆண்களிடம் இருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்?

ஓர் வீட்டில் ஆண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பெண்கள் ஒற்றை ஆளாக நின்று அவரது உடல்நலம் மற்றும் வீட்டு வேலைகளை சரி செய்துவிடுவார்கள். ஆனால், ஓர் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்ல என்றால் அந்த வீடே ஒன்றிணைந்து செயல்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், பெண்களின் அளவுக்கு ஆண்களால் செயல்பட முடியாது என்பது தான் உண்மை.

பெண்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், ஆண்கள் விழுந்து விழுந்து கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் சில வீட்டு வேலைகள், தங்கள் மீது அக்கறை அரவணைப்பு காட்டினாலே போதும் என்று தான் எதிர்பார்கிறார்கள்…..

அரவணைப்பு
மனதளவிலான அரவணைப்பு ஓர் பெண்ணுக்கு மிகவும் அவசியம். மாத்திரை, மருந்துகளை விட நோய்வாய்ப்பட்டு இருப்பவருக்கு உறுதுணையாக இருக்க கூடிய ஓர் நபர் தான் தேவை. இந்த அரவணைப்பு மனதளவில் பெரும் பலத்தை கொடுத்து விரைவாக மீண்டுவர உதவும்.

அக்கறை
அவர்களது உடல் ரீதியாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களால் வேலைகள் செய்ய முடியாத போது உடனிருந்து உதவ வேண்டும். பெண்கள் பெரும்பாலும் அனைத்து உதவிகளும் செய்வார்கள், ஆனால், ஆண்கள் அவ்வாறு செய்வது இல்லை. அவர்களை கழிவறைக்கு கூட்டி செல்வதில் இருந்து, குளிப்பாட்டி, உடை மாற்றுவது வரை உறுதுணையாக இருந்து உதவி அக்கறையாக இருக்க வேண்டும்.

உணவு
உணவு சார்ந்து பெண்கள் தான் ஆண்களுக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர்களே அதை மறந்துவிடுவார்கள். எனவே, அந்த தருணத்தில் தான் நாம் அதை அவர்களுக்கு மீண்டும் எடுத்துரைக்க வேண்டும். கண்டிப்பாக சரியாக உணவருந்த மாட்டார்கள், நீங்கள் தான் அவர்களை கட்டாயப்படுத்தி உணவருந்த கூற வேண்டும்.

மருத்துவம்
பெரும்பாலும் அனைவரின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள், அவர்களுக்கு ஏதேனும் என்றால், மருத்துவம் எல்லாம் தேவை இல்லை அதுவாக சரியாகிவிடும் என்று கூறிவிடுவார்கள். எனவே, சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள கூற வேண்டும்.

வீட்டு வேலைகள்
பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால், பெரும்பாலும் ஆண்கள் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், வீட்டு வேலைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். மீண்டும் உடல்நலம் சரியாகி வந்து பெண்கள் தான் அதை செய்ய வேண்டியிருக்கும்.

ஓர் வீட்டில் ஆண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பெண்கள் ஒற்றை ஆளாக நின்று அவரது உடல்நலம் மற்றும் வீட்டு வேலைகளை சரி செய்துவிடுவார்கள். ஆனால், ஓர் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்ல என்றால் அந்த வீடே ஒன்றிணைந்து

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.