உங்க காதலர் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாரான்னு யோசிச்சுக்குங்க!

காதல் திருமணம் என்பது பெருகிவிட்டது. காதல் மணத்தில் பெற்றோர்களுக்கு வரன் தேடி அலையும் அலைச்சல் மிச்சம் என்றாலும் நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை நமக்கு ஏற்றவர்தானா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை பயணத்தில் நம்மோடு பயணிப்பவர் காலம் முழுவதும் நம்முடன் வருவாரா? இல்லை பாதியிலேயே இந்த உறவு அறுந்துவிடுமா என்பதை தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் காதலிக்கும் போது காதலர்கள் பெரும்பாலோனோர் உண்மையான குணநலன்களை வெளிக்காட்டுவதில்லை. திருமணம் செய்து கொண்டு அவஸ்தைப் படுவதை விட ஒருமுறைக்கு பத்துமுறை யோசித்து செயல்படுவது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உங்க மேல பாசமிருக்கா?
உங்களவருக்கு உங்கள் மீது எந்த அளவிற்கு பாசம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மட்டும்தான் அவருக்குபோன் செய்கிறீர்களா? டின்னர், அவுட்டிங் என எங்கு சென்றாலும் நீங்கள் மட்டும்தான் செலவு செய்கிறீர்களா? உங்கள் காதலரிடம் இருந்து பைசா கிடைக்கவில்லையா? இது சரிப்பட்டு வராது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்க பேச்சை கவனிக்கிறாரா?
நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சை கவனிக்கிறரா? அல்லது வேறு எங்காவது பார்த்துக்கொண்டு உங்கள் பேச்சை தவிர்க்க நினைக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏனெனில் உங்கள் பேச்சை நன்றாக கவனிப்பவர் மட்டுமே உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்.
உங்களுக்கு மதிப்பிருக்கா?
பெண்களுக்கு மதிப்பு தரும் ஆண்கள்தான் வாழ்க்கைக்கு ஏற்றவர். தாயை, தன்னுடைய சகோதரியை, தூரத்து உறவில் உள்ள பெண்களை எந்த அளவிற்கு உங்கள் மதிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதை வைத்து உங்களுக்கு எந்த அளவிற்கு மதிப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
குடும்பத்திற்கு மரியாதை
ஒரு சிலர் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே கூட மதிப்பு தரமாட்டார்கள். உங்களவர் எப்படி அவரது பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் மீது பாசம் வைத்திருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் தன் குடும்பத்தை மரியாதையோடு நடத்துபவர்தான் காலம் முழுவதும் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் மரியாதையோடு நடத்துவார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பாதுகாப்பு உணர்வு
நீங்கள் காதலிக்கும் நபரின் அருகில் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா? சந்தேகம் வேண்டாம் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான். அதேசமயம், பொறுப்பாக இல்லாமல் தட்டிக்கழித்தால் வேண்டவே வேண்டாம் விட்டு விடுங்கள்.
நகைச்சுவை உணர்வு
ஆணோ, பெண்ணோ சிறிதளவேணும் நகைச்சுவை உணர்வு அவசியம். உங்களவர் எப்படி சிரிக்க சிரிக்க பேசுகிறாரா? அல்லது உங்களின்
காமெடிக்காவது சிரிக்கிறாரா?. எப்பொழுதுமே சீரியசாக இருப்பவர்கள் வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். தைரியமாக உதறிவிடலாம்.

காதல் திருமணம் என்பது பெருகிவிட்டது. காதல் மணத்தில் பெற்றோர்களுக்கு வரன் தேடி அலையும் அலைச்சல் மிச்சம் என்றாலும் நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை நமக்கு ஏற்றவர்தானா? என்பதை

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.