முட்டை சிறந்த உணவு என்பதில் உங்களுக்கு சந்தேகமில்லை. நீரைய பேர் முட்டை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என தப்பாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உண்மையில் முட்டையில் அதிக புரதம்,. நல்ல கொழுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் ஏ , கால்சியம் என பலவகையன சத்துக்கள் இருக்கின்றன.
முட்டையுடன் சேர்ந்து இன்னும் சில வகை உணவுகளை உண்ணும்போது உடல் வேகமாக இளைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அத்தகைய சூப்பர் உணவுகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.
முட்டையுடன் அவகாடோ :
அவகாடோவில் அதிக நல்ல கொழுப்பு அமிலம் உள்ளது. அதோடு முட்டையும் சேர்த்து உண்ணும்போது வேகமாக மெட்டபாலிசம் நடைபெறுகிறது.
முட்டையுடன் எஜகியல் பிரட் :
எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இது வயிறை நிரப்பும். அதிக நேரம் பசிக்காது. உடல் எடை வேகமாக குறையும். கொழுப்பு கரையும்.
முட்டையுடன் சிவப்பு மிளகாய் :
முட்டையுடன் தினமும் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் கலந்து சாப்பிட்டால் மெட்டபாலிசம் வேகமாக நடைபெறும். கொழுப்பு குடல்களில் படியாது.
முட்டையுடன் தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் அதிய அடர்த்திகொண்ட கொழுப்பு இருப்பதால் அவை இதயத்திற்கு நன்மைகள் அளிக்கின்றன. கொழுப்பை விரைவில் எரிக்கச் செய்கிறது.
முட்டையுடன் கருப்பு பீன்ஸ் :
கருப்பு பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் உடனடியாக உடல் எடை குறைகிறது. இதனால் உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும். முட்டையுடன் சேர்ந்து சாப்பிடும்போது 3.7% அதிகமாக வயிற்றுக் கொழுப்பை குறைக்குமாம்.
முட்டையுடன் பசலை :
1 கப் பசலைக் கீரையில் 7 கலோரியே இருக்கிறது. முட்டையுடன் சாப்பிடும்போது அத சத்துக்கள் இரட்டிப்பாகிறது. இதிலுள்ள தைலகாய்டு பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.