இது தெரிஞ்சா தேங்காய் ஓட்டை தூக்கிய வீச மாட்டிங்க..?

உங்களது சருமத்தை அழகுப்படுத்துவதற்காக நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு இருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு அதிகமாக பலன் கொடுக்கவில்லை என்பது போல நீங்கள் உணரலாம்.

இதற்கு காரணம் நீங்கள் அந்த பொருளை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான்.. எந்த ஒரு பொருளையும் நீங்கள் முறையாக பயன்படுத்தினால், மிகச்சிறந்த பலனை பெருவது என்பது உறுதி...

கரித்தூள்
கரித்தூள் பழங்காலமாகவே இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் நீங்கள் கூட கரித்தூளைக் கொண்டு பல் துலக்குவது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

உண்மையில் இந்த கரித்தூள் உங்களது பற்களை வெண்மையாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

கரித்தூளை கொண்டு பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் இது உதவுகிறது. இதனை ஒரு முறை டிரை செய்து பார்த்தால் நீங்கள் இது உங்களது முகத்தில் செய்யும் மாயத்தை கண்டு மீண்டும் மீண்டும் டிரை செய்ய ஆசை கொள்வீர்கள்...

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue).
  • 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள்.
  • பழைய பிரஸ்.
  • டோனர் க்ளேன்சர்.

முகத்தை சுத்தம் செய்தல்
முகத்தை அழுக்குகள் இன்றி சுத்தம் செய்த பின்னர் க்ளேன்சரை போட்டு மசாஜ் செய்ய வேண்டும், க்ளேன்சர் இல்லை என்றால் பாலை பயன்படுத்தலாம்.

மாஸ்க் தயாரித்தல்
கரித்துண்டையும், நான்- டாக்சிக் ஒயிட் க்ளூவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

நான்-டாக்சிக் ஒயிட் க்ளூவிற்கு பதிலாக நீங்கள் தேன் அல்லது முல்தானி மட்டியை இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

இதனை முகத்தில் தடவி 20 முதல் 40 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும், பின்னர் கீழிருந்து மேலாக எடுக்கவும்.

மாஸ்கை எடுத்தவுடன் தண்ணீரை கொண்டு கழுவக்கூடாது, சுத்தமான துணியால் நன்றாக துடைக்க வேண்டும்.

இதன் பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை பயன்படுத்தவும். இவ்வாறு செய்தவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்கு முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக்கூடாது.

இதனை முதலில் முகத்தின் சிறு பகுதியில் பயன்படுத்தி பார்க்கவும், அரிப்பு ஏதும் இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.

எந்த பின்விளைவுகளும் இல்லாத பட்சத்தில் வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.