மனிதன் உறங்குவதற்குக்கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றான். உறங்க வேண்டிய நேரத்தில் உழைப்பும், உழைக்க வேண்டிய நேரத்தில் உறக்கமும் என்று மனிதனின் வாழ்க்கையில் ஒரு முறையில்லாமல் இருந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், மனிதனுக்கு தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய நோய்கள் பல இருக்கின்றன. அதில், ஒன்று தான் இதய நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேனியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப்பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளார்.
மேலும், போதிய தூக்கமின்மையால் இதய நோயுடன், இரத்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால், ஒரு மனிதன் தனக்கு தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால், அவனுடைய இதயம் வெடிப்பதற்குண்டான வாய்ப்புக்கூட இருப்பதாக கூறப்படுகின்றது.
Post a Comment