நெற்றியில் தொடர்ந்து பரு வருவதற்கு என்ன காரணம் தெரியுமா..?

முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் முகத்தை மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.

பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.

தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.

அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.

ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள்.
Tags ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.