கடற்படையினரால் சுடப்பட்டு 22 வயதான தமிழ் இளைஞன் பலி

இலங்கை கடற் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலியாகியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இத் துப்பாக்கிச் சூட்டில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பலியானார். பலியானவர் தங்கச்சிமடத்தை சேர்ந்த சிட்சோ(22) என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை திரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீனவர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை, ஆனால் தற்போத மீனவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்சோவின் சடலம் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சரோன் என்ற மீனவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் பலியான மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரச மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், படுகாயம் அடைந்த சரோன் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.