யாழ்.பிரதான வீதியில் காவாளிகளின் ரவுடித்தனம்! இதற்க்கு என்னதான் முடிவு ?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதல்கள் தொடர்பில் நான்கு பேர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவியது.

இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியிலுள்ள வீடுகளின் மேலும் கற்கள் வீசப்பட்டது. இந்த அட்டகாசத்தில் ஈடுபட்ட குழுக்கள் பொலிஸார் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதன் போது இரவிரவாக நடத்தப்பட்ட சோதனையின் போது நான்கு பேர் யாழ்பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட ஏனையவர்களும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.