சத்தியாக்கிரக போராட்டத்திற்கு உரிய தீர்வு வழங்காவிடில் மிகவிரைவில் இப்போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாற்றமடையும் அப்போது உணவின்றி இறக்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம் அதற்கான முழுப்பொறுப்பினையும் அரசியல்வாதிகளும், நல்லாட்சி அரசாங்கமும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிர போராட்டம் ஐந்தாவது நாளாகவும் காரைதீவு விபுலானந்தா சதுக்கத்திற்கு முன்பாக தொடர்கிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
2002 தொடக்கம் 2017 வரைக்கும் பட்டம் முடித்த அனேக பட்டதாரிகள் இன்று வரை எந்த வேலையுமில்லாமல் இருந்து கொண்டிருக்கின்றோம். போட்டிப்பரீட்சை என்ற போர்வையில் வெறும் போலி பரீட்சைகள் வைக்கப்படுகின்றது.
இதற்கு உதாரணமாக அண்மையில் போட்டிப்பரீட்சை வைக்கப்பட்டது. அவ்வாறு நடந்த போட்டிப்பரீட்சையில் கொடுக்கப்பட்ட வினாப்பத்திரம் ஏற்கனவே வெளியாகி விட்டது என்று கூறினார்கள்.
தங்களுக்கு சார்பானவர்களை அரசபணியில் சேர்த்துக்கொள்வதற்கு போடும் நாடகமாகத்தான் இருக்கின்றது என நாங்கள் கருதுகின்றோம். இதனது உண்மைத்தன்மையினை வெளியில் கொண்டுவர வேண்டும்.
கலைப்பிரிவில் பட்டம் முடித்த அனேகருக்கு வேலை கிடைக்காத சூழ்நிலை இருக்கின்றது. அவர்களது பிரச்சினைகளையும் வெளியில் கொண்டுவர வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகும்.
இன்று இந்த இடத்தில் சத்தியாக்கிரக போராட்டமாக நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டமானது மிக விரைவில் உண்ணாவிரத போராட்டமாக மாறப்போகின்றது.
இந்த இடத்தில் எத்தனைபேர் உணவில்லாமல் மரணிக்கப் போகின்றோம் என்பதனை இந்த நல்லாட்சி அரசோ அல்லது எங்கள் சார்பாக இருக்கும் கட்சிகளோ இடங்கொடுக்காமல் எங்களது சார்பாக மாகாணசபையிலே, பாராளுமன்றத்திலோ தொடர்ந்து குரல் கொடுத்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.
இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் நலன்விரும்பிகள் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் நாட்களில் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.
ஏன் என்றால் இன்று இது எங்களது பிரச்சினை நாளை அவர்களுடைய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதும் உண்மை. இன்று எங்களது குடும்பங்களில் பல நெருக்கடிகளை சந்திக்கின்றோம். எங்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் மேசன் வேலை, கூலித்தொழில், வெளிநாடு செல்லுதல், ஆட்டோ ஓடும் வேலைகளைத்தான் செய்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம்.
தான் கற்ற கல்விக்கு தொழில் கிடைக்கும் என நம்பி திருமணம் செய்து அந்த திருமணமும் விவாகரத்து செய்யும் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு பல பிரச்சினைகளை நாங்கள் நாளாந்தம் சந்தித்து வருகின்றோம்.ஆகவே தான் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து உணவின்றி, நீர் இன்றி வைத்தியசாலைக்கோ அல்லது மரணத்தினை தழுவுவதற்கு முன்னர் வடகிழக்கில் உள்ள பட்டதாரிகளின் நிலைமைகளை உரியவர்களுக்கு எடுத்துக்கூறி உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று எங்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த சத்தியாக்கிரக போராட்டமானது எங்களுக்கான தொழில் வாய்ப்பு கிடைக்கும் வரைக்கும் இறுதி வரைக்கும் மேற்கொள்ளப்படும். இன்றும் கூட மழையோ வெயிலோ என்று பாராமல் சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டே எமது இந்த போராட்டத்தினை தொடர்ந்தவண்ணம் இருக்கின்றோம்.
இங்கு நாங்கள் தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருந்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். இன்று இந்த அரசாங்கம் கூறியிருக்கிறது, அதிகளவான வேலைவாய்ப்புக்கள் உள்ளதாக.
அதாவது இப்போது இருக்கும் பட்டதாரிகளை விட அதிகளவான வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக கூறியிருக்கின்றார்கள் அப்படியானால் எங்களை எவரும் கருத்தில் கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை.
நாங்கள் இன்றும் கூறுவது என்னவென்றால் எங்களுக்கான உரிய பதில் கிடைக்கும் வரைக்கும் இந்த இடத்தில் இருந்து வெளியேறப்போவதில்லை என்பதனை வலியுறுத்திக் கொள்ள விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க வாதிகள் என பலரும் கலந்து கொண்டு அவர்களது சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும், அங்கு வரும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் பட்டதாரிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.