யாழில் பற்றைக்குள் 15 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 2 பெண்டாட்டிக் கணவர்:

யாழ் தென்மராட்சிப் பகுதியில் மேசன் வேலை செய்து வந்த 24 வயதுடைய இரண்டு பெண்டாட்டிகளுக்கு கணவனான குடும்பஸ்தர் ஒருவர் 15 வயதுச் சிறுமியையும் தனது இச்சைக்குப் பயன்படுத்த பற்றைக்குள் அழைத்துச் சென்ற சமயம் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது.

அதன் பின்னர் பொதுமக்கள் இவனை நையப்புடைத்து கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த நபருக்கு திருமணமாகி ஒரு பிள்ளை இருப்பதாகவும் அந்த மனைவியை கைவிட்டு விட்டு இன்னொரு பெண்ணை மணம்முடித்ததால்  நபருக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் தெரியவருகின்றது. அந்த வழக்குக்கு சமூகமளிக்காத காரணத்தால் இன் நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் தனது இரண்டாவது மனைவியுடன் மறைவாக வாழ்ந்து வந்த குறித்த நபரே, தான்  வேலை செய்த வீட்டுக்கு அருகில் வசித்த சிறுமியை ஆசை வார்த்தை பேசி இச்சைக்குப் பயன்படுத்த முற்பட்டார் எனத் தெரியவருகின்றது,

கொடிகாமம் பொலிசார் குறித்த நபரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பருத்தித்துறையில் உள்ள வழக்குக்காக அவரை 8ம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.