தமிழீழ எழுச்சிப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்க நிகழ்வு....

தமிழீழ எழுச்சிப் பாடகராக விளங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதி உன்னத இசைப் பணியாற்றி சாவடைந்த மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 28.02.2017 ம் திகதி செவ்வாய்க் கிழமை அன்றைய தினம் பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இறுதி வணக்க நிகழ்வுகளில் கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என அனைவரையும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.