ஈழத்து சரித்திர நாயகன்…! புரட்சிப் பாடகர் சாந்தனது இறுதிக் கிரியைகள் கண்ணீருடன் ஆரம்பம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பகல் மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் படி எஸ்.ஜி.சாந்தன் சாந்தனின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 தொடக்கம் 11.00 வரை ஓட்டுமடம் அன்பன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் பிரேதம் இரவு 11 மணியளவில் மாங்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் நாளை திங்கட்கிழமை அவரது உடல் மு.ப 11 மணியளவில் இறுதிக் கிரியைகளுக்காக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்ட காலத்திலும் கலைத்துறையில் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை. என்பதற்கு காந்தக் குரலோன் சாந்தன் சிறந்த எடுத்துக்காட்டு.

அவரது ஆத்ம சாந்திக்கான இறுதிக் கிரியைகள் கண்ணீருடன் ஆரம்பமாகி உள்ளது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.