வீர மறவர்களின் வீரத்தை வீரத்தமிழால் உலகிற்கு பறைசாற்றிய சாந்தனுக்காக, ஓங்கி ஒலிக்கும் ஈழக் குரல்!

ஈழ விடுதலையின் வீரியத்தை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றது தமிழீழ பண்பாட்டு இயக்கமும், தமிழீழ இசைக்குழுவினரும்தான் என்பது உண்மையாகும்.

இதற்கு புரட்சிப் பாடகர் சாந்தனின் பங்களிப்பு மிக சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது.

புரட்சிப் பாடல்களாலும், உணர்ச்சிக் குரலின் தாக்கத்தினாலும், இளைஞர்கள், யுவதிகளை விடுதலைப் போராட்டத்தில் இணைய வைத்ததில் இவரின் பாடல்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

வீர மறவர்களின் வீரத்தை வீரத்தமிழால் உலகிற்கு பறைசாற்றிய பாடகர் சாந்தன் அவர்கள், மண்ணுலகை விட்டு மறைந்தாலும் தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதற்கு எடுத்துக்காட்டாக கனடாவில் வாழும் “ஈழ மண் கலைக்கூடம்” இயற்றிய பாடல் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் மனோ, இசையமைத்து பாடியவர் நிரோஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.