யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பக்கம் வரவேண்டாம் என அறிவித்தல்!!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்று நோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது.

இதில் குறிப்பாக டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று நோய்களின் தாக்கங்கள் அடங்குகின்றன.

எனவே பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் உள்ள நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வருவதை இயன்ற அளவு தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் . கர்ப்பிணிகள் , குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாவோர் அவசியமற்று வைத்திய சாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளவும் .
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.