180 கிலோவிலிருந்து 80 கிலோவிற்கு உடல் எடையை குறைக்க, ஒருவர் செய்த விஷயங்கள் என்ன தெரியுமா?

உடல் பருமன் என்பது எல்லா நோய்களுக்கும் அடிப்படை காரணம். என்ன செய்தாலும் உடல் குறையவில்லை என பலர் புலம்புவதுண்டு.

காட்டுத்தனமான உடற்பயிற்சியோ, வெறும் புல் பூண்டு சாப்பிடும் டயட் மட்டுமோ உடல் எடை குறைக்காது.

சில நுணுக்களை உணர்ந்து , நமது உடலில் எங்கு தவறு என அறிந்து பின்னர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று 100 கிலோ எடையை குறைத்தஒருவர் கூறுகிறார். இவர் சொல்லும் விஷயங்களை கொஞ்சம் கேளுங்கள்.

நான் அளவுக்கதிக உடல் எடையில் இருந்தபோது மருத்துவரை நாடினேன். அவர் சொன்ன டயட்டை பின்பற்றினேன்.

கிட்டத்தட்ட எல்லா வகை உணவுகளையும் டயட் லிஸ்ட்டில் நீக்கியிருந்தார்

ஒவ்வொரு டயட் சார்ட்டிலும் உணவுகளை மாற்றினாலும் எனது உடல் எடை குறையவில்லை. மாறாக 6 கிலோ ஏறியது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம். 2009 ல் ஆரம்பித்த டயட்டில் 2011 ஆம் ஆண்டு 6 கிலோ அதிகமாகி 181 கிலோ இருந்தேன்.

இதனால் கூடுதல் மன அழுத்தத்தில் இருந்தேன். என்ன பிரச்சனை, எதனால் உடல் எடை குறையவில்லை என ஆராய்ந்து சில விஷயங்களை மாற்றினேன்.

அதிக ஒமேகா-3 மற்றும் உயர் ரக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டேன். சாக்லேட், சிப்ஸ், பீஸா சாப்பிட வேண்டும் என தோன்றினால் , உடனே சாப்பிட்டேன்.

ஏனென்றால் அதிக கட்டுப்பாடு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது என புரிந்து கொண்டேன்.

ஆனால் நாளடைவில் நான் சாப்பிடும் உயர் ரக புரொட்டின் உணவுகளால் மசால் மற்றும் இனிப்புகளின் மேல் ஆசை குறைந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

எனக்கு அளவுக்கு அதிகப்படி ஏற்பட்டதற்கு எனது ஜீரண மண்டல பாதிப்பு என அறிந்தேன். போதிய அளவு சத்துக்களை உட்கிரகிக்க முடியாமல், ஹார்மோன் சம நிலையில்லாமல் கொழுப்பு செல்கள் அதிகரித்துள்ளது.

இதனால்தான் உடல் பருமன் அதிகமானது என அறிந்த பின் ஜீரண மண்டலத்தின் பாதிப்பை குணப்படுத்த இயற்கையான முளைக்கட்டிய பயிறு வகைகள், நல்ல பேக்டீரியாக்களை அதிகரிக்கும் தயிர் யோகார்ட் , ஜீரண என்சைம்களை தூண்டும் உணவுகளை கண்டறிந்து அவற்றை தொடர்ந்து சாப்பிட்டேன்.

இரவுகளில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் அவ்வப்போது விழித்தபடி வரும் தூக்கம் ஒரு வியாதி (sleep apnea) .

இரவில் கார்டிசால் சுரப்பு அதிகமாவதால், சரிவர தூக்கமில்லாத நிலையில், மசால உணவுகளின் மீது விருப்பம் அதிகரிக்கிறது என அறிந்து, தூக்கமின்மையை தடுக்கும் CPAP என்ற மெசினை உபயோகித்து இந்த பாதிப்பை சரிபடுத்தினேன்

மன அழுத்தமும் அதிக மசால உணவுகளை சாப்பிடுவதற்கு காரணம் என அறிந்த பின் என் மனதை மிகவும் புத்துணர்வாக வைத்திருக்க மெனக்கெட்டேன்.

எப்போதெல்லாம் சாப்பிடத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் சென்று நிறைய ஃப்ரஷான உணவுகளை சாப்பிட்டேன். இதனால் மன இறுக்கம் குறைந்து உடல் எடையில் மாற்றம் தெரிந்தது. 80 கிலோ வரையில் குறைந்திருந்தேன்.

80 கிலோவரை குறைந்ததும், டி-டாக்ஸ் பற்றி அறிந்தேன். எனது உடலில் உள்ள அதிகப்படியான எக்ஸ்ட்ரா 20 கிலோவிற்கு காரணம் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களே என தெரிந்தது.

அந்த நச்சுக்களை வெளியேற்ற திரவாகாராம் எடுத்துக் கொண்டேன். ஆப்பிள் சைடர் வினிகர், எலுமிச்சை சாறு, பழச் சாறுகள், காய்களின் சாறுகள் என இவற்றை அதிகம் எடுத்துக் கொண்டேன். விளைவு அந்த 20 கிலோ எடையும் குறைந்தது.

இப்போது நான் 80 கிலோவில் இருக்கிறேன். சரியாக 100 கிலோ எடையை குறைத்திருக்கிறேன் என்பதில் எனக்கு அளவ்ற்ற மகிழ்ச்சி.

எனவே உடல் எடையை குறைய அவரவர் உடலிற்கு தகுந்தாற்போல், எதை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என தெரிந்து கொண்டு எடை குறைப்பை தொடங்குங்கள். பலன் கிடைக்கும்.

உடல் பருமன் என்பது எல்லா நோய்களுக்கும் அடிப்படை காரணம். என்ன செய்தாலும் உடல் குறையவில்லை என பலர் புலம்புவதுண்டு.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.