ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை 3 மணியளவில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க காரைக்குடி டி.ஸ்.பி அலுவலகத்துக்கு ஓடி வந்தாள் 14 வயதுச் சிறுமி.
அவளுடன் 12 வயதில் மற்றொரு சிறுமி நேராக டி.ஸ்.பி. அறைக்குச் சென்ற அவள் கூறியதைக் கேட்ட டி.ஸ்.பி கார்த்திகேயனுக்கோ கடும் அதிர்ச்சி!
அவள் கூறியது இதுதான் :
என் பேரு பத்மபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் என்னுடய தங்கச்சி கற்பகம். பக்கத்துல அரியக்குடிதான் சொந்த ஊர். வீட்டுல கஷ்டம். அதனால் காளவாய் பொட்டலிலுள்ள ஒரு வீட்.டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க எங்கம்மா. அங்க கொஞ்ச நாள் நல்லபடியாத்தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்.
திடுதிப்புன்னு இன்னொரு வீட்டுல வயசான அம்மா இருக்காங்க அவங்களைப் பார்த்துக்கனும் என்று சொல்லி இப்ப நாங்க இருக்கிற வீட்டிற்கு கூட்டிட்டு வந்தாங்க.
அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அது எங்கள மாதிரி சின்னக் குழந்தைகளை வைத்து விபசாரம் செய்யிற இடம் என்று. வீட்டுக்கும் போக முடியாது வெளிய சொன்னாலும் பிரச்சினை. முரண்டு பிடிக்கிற என்னை மாதிரி புள்ளைகளை மிரட்டி சூடு வைச்சு கஸ்டமர்கள்கிட்ட போகச் சொல்லுவாங்க. முடியாதுன்னா தொலைஞ்சோம்.
வாராவாரம் எங்கம்மா வந்து இவங்க கொடுக்கிற பணத்தை வாங்கிட்டு வீட்டுக்குப் போயிடும். அப்புறம் தான் தெரிஞ்சுது எங்க அம்மாவுக்கும் இந்த விடயம் தெரியும் என்று. எனக்கு நடக்கிற கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு நினைக்காத சாமி இல்லை. அப்பதான் என்ன மாதிரியே என் தங்கச்சியையும் இங்கே கொண்டு வந்து விட்டாங்க. அதைப் பொறுக்க முடியாமத்தான் இந்தப் புகாரைக் கொடுக்கிறேன் என்றாள். பால்மணம் மாறாத 14 வயதுச் சிறுமி இப்படிச் சொன்னால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது.
அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் டி.எஸ்.பி. கார்த்திகேயன். சிறுமிகள் கூறிய காரைக்குடி செக்காலை ரோடு முதல் வீதி நடராஜா தெருவிலுள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பூமயில் அவரது மகள் சொர்ணலதா ஆகியோரைக் கைது செய்து சிறையில் தள்ளினார். மேலும் அங்கிருந்த சிறுமிகளையும் பொலிஸார் மீட்டனர். இதற்குப் பிறகு தான் அந்த வீட்டில் பாலியல் தொழில் நடந்ததே அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது.
காரணம் அந்த இரு பெண்களும் தாங்கள் அநாதை ஆசிரமம் நடத்துவதாகக் கூறி அப்பகுதி மக்களை நம்ப வைத்திருக்கின்றனர். மேலும் அநாதை இல்லம் என்பதால் அந்த வீட்டிற்கு அட்வான்ஸ்கூட வாங்கவில்லை என்று புலம்பினார். வீட்டின் உரிமையாளர்.
விசாரணையில் சில பணக்காரக் கஸ்டமர்கள் மேற்படி மேட்டருக்கு வரும்போது அதை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. இதில் காரைக்குடியில் புகழ்பெற்ற நகைக்கடை அதிபரும் பஸ் உரிமையாளரும் அடக்கமாம். இவர்களுக்கு ரிட்டையர் பொலிஸ் அதிகாரியின் மகனும் சப்போர்ட்டாம்!